காதல் திருமணம் செய்த மகள்; வீட்டை நொறுக்கினார் தந்தை

Added : செப் 11, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
தஞ்சாவூர் : மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால், ஆத்திரமடைந்த தந்தை, அவரது காதலன் வீட்டை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே, கொத்துக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கருணாநிதி, 65; தி.மு.க., ஒன்றியக் குழு உறுப்பினர். இவரது மகள் கனிமொழி, 22. இவர் உறவினரான ராஜாராமன், 67, மகன் செல்வகுமார், 24, என்பவரை காதலித்துள்ளார். காதலுக்கு
காதல் திருமணம் செய்த மகள்; வீட்டை நொறுக்கினார் தந்தை

தஞ்சாவூர் : மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால், ஆத்திரமடைந்த தந்தை, அவரது காதலன் வீட்டை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே, கொத்துக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கருணாநிதி, 65; தி.மு.க., ஒன்றியக் குழு உறுப்பினர். இவரது மகள் கனிமொழி, 22. இவர் உறவினரான ராஜாராமன், 67, மகன் செல்வகுமார், 24, என்பவரை காதலித்துள்ளார். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், செப்., 9ம் தேதி கனிமொழி, வீட்டை விட்டு வெளியேறி செல்வகுமாரை திருமணம் செய்து கொண்டார்.

ஆத்திரமடைந்த கருணாநிதி, நேற்று முன்தினம் இரவு, சிலருடன் ராஜாராமன் வீட்டிற்கு சென்று, தகாத வார்த்தைகளில் திட்டி, வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளையும், 'டூ - வீலர்' போன்றவற்றையும் அடித்து நொறுக்கினார். ராஜாராமன் உறவினரான தினேஷ் என்பவரையும் தாக்கி, அவரது 2 சவரன் செயின், மொபைல் போன், 20 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறித்து தப்பிச் சென்றனர். காயமடைந்த ராஜாராமன், தினேஷ் ஆகியோர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருநீலக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். ராஜாராமன் குடும்பத்தினரை தாக்கியவர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தி, உறவினர்கள் கும்பகோணம் - காரைக்கால் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.போலீசார், 'மூன்று பேரை கைது செய்துள்ளோம், மற்றவர்களை இரவுக்குள் கைது செய்து விடுவோம்' என கூறியதால், மறியலை கைவிட்டு கலைந்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridhar - Chennai,இந்தியா
13-செப்-202207:18:16 IST Report Abuse
sridhar பெயர்கள் பொருந்துகிறது .
Rate this:
Cancel
Abdul Rahman - Madurai,இந்தியா
12-செப்-202216:18:22 IST Report Abuse
Abdul Rahman இந்த சிறு கண்ணாடியை உடைத்துதான் "அடித்து நொறுக்கினாரா"?
Rate this:
Cancel
Subramanian N - CHENNAI,இந்தியா
12-செப்-202216:14:13 IST Report Abuse
Subramanian N அவர் அப்படித்தான் நடந்து கொள்வார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X