இதே நாளில் அன்று

Added : செப் 12, 2022 | |
Advertisement
செப்டம்பர் 12, 2010 கேரள மாநிலம் பாலக்காடில், கே.சி.சேருக்குட்டி - கல்யாணி தம்பதிக்கு மகளாக, 1973 ஏப்ரல், 29ல் பிறந்தவர் சுவர்ணலதா. பாடகரும், ஆர்மோனிய கலைஞருமான தந்தையிடம் இசையின் நுணுக்கங்களை கற்றார். பின், 1987ல், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம், உயர்ந்த மனிதன் படத்தின், 'பால் போலவே' என்ற பாடலை பாடிக் காட்டினார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கதை, வசனத்தில் தயாரான,
இதே நாளில் அன்று

செப்டம்பர் 12, 2010

கேரள மாநிலம் பாலக்காடில், கே.சி.சேருக்குட்டி - கல்யாணி தம்பதிக்கு மகளாக, 1973 ஏப்ரல், 29ல் பிறந்தவர் சுவர்ணலதா. பாடகரும், ஆர்மோனிய கலைஞருமான தந்தையிடம் இசையின் நுணுக்கங்களை கற்றார். பின், 1987ல், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம், உயர்ந்த மனிதன் படத்தின், 'பால் போலவே' என்ற பாடலை பாடிக் காட்டினார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கதை, வசனத்தில் தயாரான, நீதிக்குத்தண்டனை படத்தில், பாரதியாரின், 'சின்னஞ்சிறு கிளியே' பாடலை பாட விஸ்வநாதன் வாய்ப்பளித்தார். அப்போது, சுவர்ணலதாவுக்கு வயது, 14. தொடர்ந்து, குருசிஷ்யன், தளபதி, சத்ரியன், சின்னத்தம்பி உள்ளிட்ட, முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடி புகழடைந்தார்.

'போவோமா ஊர்கோலம்' பாடலுக்காக தமிழக அரசின் விருதையும், 'போறாளே பொண்ணுத்தாயி' பாடலுக்காக தேசிய விருதையும் பெற்றார். நுரையீரல் பாதிப்பால், 2010ல் இதே நாளில், தன், 37வது வயதில் மரணமடைந்தார். 'ராக்கம்மா கையத் தட்டு, ஆட்டமா தேரோட்டமா' என ஆடவும், 'மாலையில் யாரோ, குயில் பாட்டு ஓ வந்ததென்ன' என ஏங்கவும், 'போவோமா ஊர்கோலம்' என துள்ளவும், பாடல்களை தந்த குரலரசியின் நினைவு தினம் இன்று!


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X