'கவரிங்' நகையை அடகு வைத்துமோசடி செய்த நால்வருக்கு சிறை

Added : செப் 12, 2022 | |
Advertisement
பட்டாபிராம்:ஆவடி அடுத்த பட்டாபிராம் தெற்கு பஜாரில் அலாவுதீன், 40, என்பவர் 'அல்மரியம் ஜுவல்லரி' என்ற பெயரில் அடகு கடை நடத்தி வருகிறார். கடந்த 9ம் தேதி 12:30 மணியளவில், பாபு என்பவர் மூன்று சவரன் சங்கிலியை அடமானம் வைத்து, 70 ஆயிரம் ரூபாய் பெற்றுச் சென்றுள்ளார்.நேற்று முன்தினம் அலாவுதீன், ஆவடியில் உள்ள கும்பகோணம் வங்கியில் சங்கிலியை 'டெபாசிட்' செய்யச் சென்றார். அங்கு நகையை
'கவரிங்' நகையை அடகு வைத்துமோசடி செய்த நால்வருக்கு சிறை

பட்டாபிராம்:ஆவடி அடுத்த பட்டாபிராம் தெற்கு பஜாரில் அலாவுதீன், 40, என்பவர் 'அல்மரியம் ஜுவல்லரி' என்ற பெயரில் அடகு கடை நடத்தி வருகிறார்.

கடந்த 9ம் தேதி 12:30 மணியளவில், பாபு என்பவர் மூன்று சவரன் சங்கிலியை அடமானம் வைத்து, 70 ஆயிரம் ரூபாய் பெற்றுச் சென்றுள்ளார்.நேற்று முன்தினம் அலாவுதீன், ஆவடியில் உள்ள கும்பகோணம் வங்கியில் சங்கிலியை 'டெபாசிட்' செய்யச் சென்றார். அங்கு நகையை பரிசோதித்த வங்கி ஊழியர், சங்கிலியின் கொக்கியை தவிர, மற்ற அனைத்தும் கவரிங் என தெரிவித்தார்.
இதுகுறித்த புகாரின்படி பட்டாபிராம் போலீசார், 'சிசிடிவி' காட்சிகள் மற்றும் மொபைல் எண் வாயிலாக விசாரித்தனர். இதில், அரக்கோணத்தைச் சேர்ந்த பெருமாள், 49, திருத்தணியைச் சேர்ந்த ரமேஷ், 50, சோளிங்கரைச் சேர்ந்த பிரகாஷ், 26, சின்ன செம்பேடு பகுதியைச் சேர்ந்த அமரேஷ், 33, ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.அவர்கள் நான்கு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 68 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். நால்வரையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X