இருள் சூழ் சர்வீஸ் சாலையில் திக்... திக் பயணம்

Added : செப் 12, 2022 | |
Advertisement
அவிநாசி:அவிநாசியை ஒட்டி, கோவை - சேலம் பைபாஸ் சாலை செல்கிறது; இதையொட்டியுள்ள சர்வீஸ் சாலையில், தினமும் ஏராளமான வாகனங்கள்பயணிக்கின்றன. சர்வீஸ் சாலையில், இரவு நேரங்களில் சில இடங்களில் இருள் சூழ்ந்து, கும்மிருட்டாக உள்ளது.சமீப நாட்களாக, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், இரவில், சர்வீஸ் சாலையில் பயணிக்கும் மக்களிடம் இத்தகைய செயல்களில் சிலர்
இருள் சூழ் சர்வீஸ் சாலையில் திக்... திக் பயணம்

அவிநாசி:அவிநாசியை ஒட்டி, கோவை - சேலம் பைபாஸ் சாலை செல்கிறது; இதையொட்டியுள்ள சர்வீஸ் சாலையில், தினமும் ஏராளமான வாகனங்கள்பயணிக்கின்றன. சர்வீஸ் சாலையில், இரவு நேரங்களில் சில இடங்களில் இருள் சூழ்ந்து, கும்மிருட்டாக உள்ளது.சமீப நாட்களாக, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், இரவில், சர்வீஸ் சாலையில் பயணிக்கும் மக்களிடம் இத்தகைய செயல்களில் சிலர் ஈடுபடுவதும் உண்டு. இதனால், சர்வீஸ் சாலையில் பயணிப்போர், அச்சத்துடனேயே பயணிக்க வேண்டியுள்ளது.இந்த இருட்டை சாதகமாக்கி, சில நிறுவனத்தினர் மற்றும் கடைக்காரர்கள், பனியன் கழிவு, இறைச்சிக் கழிவுகளை சர்வீஸ் சாலையில் கொட்டிவிட்டு சென்றுவிடுவதும் உண்டு.சர்வீஸ் சாலையில், இருள் சூழ்ந்த இடங்களில் மட்டுமாவது தெருவிளக்கு பொருத்த வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.ஆனால், 'சர்வீஸ் சாலையை ஒட்டியுள்ள ஊராட்சி நிர்வாகங்கள், மின் கம்பம் பொருத்தி, மின் விளக்கு பொருத்து வதற்குரிய கட்டணம் செலுத்தினால் மட்டுமே, மின் கம்பம் பொருத்த முடியும்' என்கின்றனர் மின் வாரியத்தினர்.ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், “கிராம ஊராட்சிகளில் அத்தியாவசிய வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ளவே போதிய நிதியில்லாத சூழலில், சர்வீஸ் சாலையில் மின்கம்பம் பொருத்த நிதி செலவிடுவதற்கான வாய்ப்பு இல்லை," என்கின்றனர்.மின் செலவு இல்லாத, சோலார் ஆற்றல் மூலம் ஒளிரும் மின் கம்பங்களை பொருத்தினால், இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X