ராணிப்பேட்டையிலும் வேலூர் 'மாடல்!'; போர்வெல்லை அகற்றாமல் சாலை

Updated : செப் 12, 2022 | Added : செப் 12, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
அரக்கோணம் : போர்வெல் எனப்படும் ஆழ்துளை குழாயை அகற்றாமல், ராணிப்பேட்டை மாவட்டத்திலும், வேலுார் 'மாடல்' அவலம் அரங்கேறி, அதிகாரிகளின் லட்சணத்தை அம்பலப்படுத்தியுள்ளது.வேலுார் மாநகராட்சியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் பாதாள சாக்கடை, சாலை அமைக்கும் பணி நடக்கிறது.இதில் சில இடங்களில் கை பம்பு, போர், ஜீப், பைக் மீது சாலை போட்டதும், பத்திரிகைகளில் செய்தி வந்ததும், சரி
வேலுார், ஸ்மார்ட் சிட்டி, சாலை,பாதாள சாக்கடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

அரக்கோணம் : போர்வெல் எனப்படும் ஆழ்துளை குழாயை அகற்றாமல், ராணிப்பேட்டை மாவட்டத்திலும், வேலுார் 'மாடல்' அவலம் அரங்கேறி, அதிகாரிகளின் லட்சணத்தை அம்பலப்படுத்தியுள்ளது.

வேலுார் மாநகராட்சியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் பாதாள சாக்கடை, சாலை அமைக்கும் பணி நடக்கிறது.இதில் சில இடங்களில் கை பம்பு, போர், ஜீப், பைக் மீது சாலை போட்டதும், பத்திரிகைகளில் செய்தி வந்ததும், சரி செய்யப்பட்டன. இது தொடர்பாக துணை பொறியாளர் பழனி 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.அந்த வரிசையில் வேலுாரை தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்திலும், போர்வெல்லை அகற்றாமல் சாலை அமைத்துள்ளனர்.


latest tamil news


அரக்கோணம் நகராட்சியில், இரண்டாவது வார்டுக்கு உட்பட்ட தாசில்தார் குறுக்குத்தெருவில் போர்வெல், கை பம்பு மீது சிமென்ட் சாலை அமைத்துள்ளனர். இதனால் கை பம்பை பயன்படுத்த முடியாமல், மக்கள் குடிநீருக்கு அவதிப்படுகின்றனர். நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தால், ஒப்பந்ததாரர்களிடம் கேட்குமாறு, அலட்சியமாக பதில் தெரிவிப்பதாக மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இதேபோல் திருப்பத்துார் நகராட்சி ஐந்தாவது வார்டு, ஒன்றாவது குறுக்குத் தெருவிலும் போர்வெல்லை அகற்றாமல், 'ஹாலோ பிளாக்' கற்கள் பதித்து சாலை அமைத்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
12-செப்-202208:57:43 IST Report Abuse
VENKATASUBRAMANIAN முட்டாள்கள் ஆட்சியில் முட்டாள்கள் இன்ஜினியர்கள். இதுதான் திராவிட மாடல்
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
12-செப்-202207:43:56 IST Report Abuse
Indhuindian வேலூரில் பிறந்ததுதான் திமுக ஆகவே இதை வேலூர் மாடல் என்பதைவிட திராவிட மாடல் என்று சொல்வதே சால பொருந்தும்
Rate this:
Cancel
Dhandapani - Madurai,இந்தியா
12-செப்-202207:20:22 IST Report Abuse
Dhandapani ஒன்று இதை பார்வை இடும் பொறியாளருக்கு பொது அறிவு வேண்டும், இல்லை ஒப்பந்ததாரருக்கு அறிவு வேண்டும், இரண்டு பேருக்கும் அறிவு இல்லாதபோது ஆள்பவர்கள் என்ன செய்ய, வாங்குகிற சம்பளமும், போடுகிற ரோடும் மக்கள் வரி பணத்திலதான் என்பதை அதிகாரிகள் முதலில் உணரவேண்டும் சார், இதற்கு பொறுப்பானவர்களை உடனே சஸ்பென்ட் செய்வதைவிட சட்டப்படி பதவி இரக்கம் செய்து கீழே கொண்டு சென்றால் அவமானத்தால் அடுத்த அதிகாரி ஒழுங்கா பொறுப்பை வேலை செய்வாங்க சார், முதலில் ரோடு போடும் பணியில் அரசியல் வாதி தலையீடு இருக்க கூடாது சார், மதுரை தல்லாகுளம் பொதுப்பணித்துறை அலுவலக வளாகமுன் சாலை மிக கேவலமாக உள்ளது சார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X