தமிழகத்தில் மின் கட்டணம் குறைவே! கர்நாடகா, குஜராத்தை காட்டி அமைச்சர் விளக்கம்

Added : செப் 12, 2022 | கருத்துகள் (36) | |
Advertisement
கரூர்: ''வீட்டு உபயோக மின் கட்டணத்தை பொறுத்தவரை, கர்நாடகா, குஜராத் மாநிலங்களை விட தமிழகத்தில் மிக குறைந்த கட்டணமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது,'' என, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.கரூரில் நேற்று அவர் கூறியதாவது: தமிழகத்தில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மூலம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி, மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இங்கு, 3 கோடி மின் நுகர்வோர்
electricity bill, TNEB, Senthil Balaji, Minister

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கரூர்: ''வீட்டு உபயோக மின் கட்டணத்தை பொறுத்தவரை, கர்நாடகா, குஜராத் மாநிலங்களை விட தமிழகத்தில் மிக குறைந்த கட்டணமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது,'' என, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

கரூரில் நேற்று அவர் கூறியதாவது: தமிழகத்தில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மூலம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி, மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இங்கு, 3 கோடி மின் நுகர்வோர் இருக்கும் நிலையில், 7,398 பேர் மட்டுமே நேரடியாக, 'இ - மெயில்' மூலம் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதன் அடிப்படையில், உத்தேசிக்கப்பட்ட கட்டணத்தை விட, 3,217 கோடி ரூபாய் கட்டணம் குறைக்கப்பட்டது. மேலும், 100 யூனிட்டுக்குள் பயன்படுத்துபவர்கள், ஒரு கோடி பேர் வரை உள்ளனர். இந்த ஒரு கோடி நுகர்வோருக்கு கட்டண உயர்வு இல்லை. அடுத்ததாக, 101 முதல், 200 யூனிட் வரை பயன்படுத்துவோர், 63 லட்சத்து, 35 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களுக்கு ஒரு மாதத்துக்கு, 27.50 ரூபாய் மட்டுமே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது ஒரு நாளைக்கு ஒரு ரூபாயை விட குறைவு.

மொத்தம், 201 முதல், 300 யூனிட் வரை பயன்படுத்துவோர், 36 லட்சத்து, 25 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களுக்கு, 72.50 ரூபாய் மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது.அதுபோல, 301 முதல், 400 யூனிட் வரையிலான, 18 லட்சத்து, 82 ஆயிரம் பேருக்கு, ஒரு மாதத்துக்கு, 147.50 ரூபாய் என்ற அளவில் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.


latest tamil news


இதே கட்டணங்களை கர்நாடகாவுடன் ஒப்பிடுகையில், 100 யூனிட் வரை ஆரம்ப கட்டத்திலேயே, 4.30 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. குஜராத்தில், 5.25 ரூபாயாக வசூலிக்கப்படுகிறது. தமிழகத்தில், 101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்தும், 63 லட்சம் மின் நுகர்வோருக்கு, 4.50 ரூபாய் கட்டணம் நிர்ணயித்தாலும், 2.25 ரூபாய் மானியமாக வழங்கப்படவுள்ளது.

தமிழக அரசு வாயிலாக, 9,000 கோடி ரூபாய் கடந்த ஆண்டு மானியம் வழங்கிய நிலையில், இந்த ஆண்டு, 3,500 கோடி அளவுக்கு அரசு மானியம் வழங்கியுள்ளது.வீட்டு உபயோக மின் கட்டணத்தை பொறுத்தவரை, கர்நாடகா, குஜராத் மாநிலங்களை விட, மிக குறைந்த கட்டணமே தமிழகத்தில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை பொறுத்தவரை, 2.26 லட்சம் நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடிய மின்சாரத்துக்கு, 50 காசுகள் மட்டுமே மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்த நிலையில் உள்ள, வணிக நுகர்வு மின்சாரம் பயன்படுத்தும், 19 லட்சத்து, 28 ஆயிரம் பேருக்கும், 50 காசுகள் தான் உயர்த்தப்பட்டுள்ளது.கடந்த, 9ம் தேதி வரை பழைய முறையில் மின் கணக்கீடு இருக்கும். நேற்று முன்தினம் முதல் புதிய கட்டண விகிதப்படி இருக்கும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D. Austin. David - Ariyalur,,இந்தியா
12-செப்-202215:24:18 IST Report Abuse
D. Austin. David என்ன பாஸ் பெட்ரோல் விலை உயர்ந்துபோச்சு, அரிசிக்கு ஏன் பாலுக்கு கூட ஜீ எஸ்டி வந்தாச்சு நாம இது வரைக்கும் ஒரு வார்த்தை யாரைப் பார்த்தாவது பேசியிருப்போம் பெட்ரோல ஊத்துறோம் - காச கொடுக்குறோம் - எவ்வளவு கொடுத்தோங்றதையே மறக்குறோம். அரிசி வாங்குறோம் சமைக்கறோம் சாப்புட்றோம் - ஜீஎஸ்டி மறக்குறோம். பாலை வாங்கி காச்சி குழந்தைக்கு குடுக்குறோம் - மறக்குறோம். இன்னும் விஷயத்தை மறந்து கொண்டுதான் இருக்கிறோம். அதைப் போல இதையும்.......
Rate this:
Cancel
12-செப்-202212:47:37 IST Report Abuse
ராமகிருஷ்ணன் அணில் அவர்களே இப்ப இவ்வளவு பிலாக்காணம் செய்யும் நீங்கள், கடந்த அதிமுக ஆட்சியில் உங்கள் தலைவர் ⚡ மின் கட்டண உயர்வை கண்டித்து பதாகைகளை ஏந்தி போராடினாரே,அப்ப இந்த ஒப்பீடு தெரியவில்லையா. 😛 சுருட்டுவதற்கு பணம் 💵 தேவை என்று வெளிபடையாக ஒப்புக் கொள்ளுங்கள்.
Rate this:
Cancel
raja - Hyderabad,இந்தியா
12-செப்-202211:26:50 IST Report Abuse
raja //ஒரு மாதத்துக்கு, 147.50 ரூபாய் என்ற அளவில் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.// - அதென்ன சார் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது? அதிகரிக்கப்பட்டுள்ளது என்ற வார்த்தை தானே சரி? // நுகர்வோருக்கு, 4.50 ரூபாய் கட்டணம் நிர்ணயித்தாலும், 2.25 ரூபாய் மானியமாக வழங்கப்படவுள்ளது// - அது ஏன் சார் அதிகரிச்சுட்டு மானியம் குடுக்குறீங்க? நாளைக்கு ஒட்டுப்பிச்சை கேக்க பயன்படுமேன்னா? திமுக காரனுக்கு இந்தமாதிரி விஷயமெல்லாம் ரத்தத்துல ஊருனது போல.
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
12-செப்-202212:36:25 IST Report Abuse
கல்யாணராமன் சு.\\திமுக காரனுக்கு இந்தமாதிரி விஷயமெல்லாம் ரத்தத்துல ஊருனது போல.\\ ... இவர் triple sundae icecream மாதிரி ... அதிமுக, அமமுக, திமுக அப்படின்னு மூணு கட்சிக்கு தாவி தாவி வந்திருக்கார் ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X