பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா

Added : செப் 12, 2022 | |
Advertisement
அனுப்பர்பாளையம்:குன்னத்துார் அடுத்த வெள்ளியம்பதி ஊராட்சி பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த மாதம் 25 ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.கடந்த 7ம் தேதி இரவு 7:00 மணிக்கு கிராம சாந்தி, 8ம் தேதி இரவு 8:00 மணிக்கு கோவில் புகுதல், 10ம் தேதி காலை 7:00 மணிக்கு மாவிளக்கு எடுத்து வருதல், மாலை 6:00 மணிக்கு முரசனுக்கு மாலை அணிவித்தல், இரவு 7:00 மணிக்கு குண்டம் திறப்பு உள்ளிட்ட
பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா

அனுப்பர்பாளையம்:குன்னத்துார் அடுத்த வெள்ளியம்பதி ஊராட்சி பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த மாதம் 25 ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.கடந்த 7ம் தேதி இரவு 7:00 மணிக்கு கிராம சாந்தி, 8ம் தேதி இரவு 8:00 மணிக்கு கோவில் புகுதல், 10ம் தேதி காலை 7:00 மணிக்கு மாவிளக்கு எடுத்து வருதல், மாலை 6:00 மணிக்கு முரசனுக்கு மாலை அணிவித்தல், இரவு 7:00 மணிக்கு குண்டம் திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனை தரிசித்தனர்.நாளை இரவு 7:00 மறு பூஜை, 14ம் தேதி காலை 8:00 மணிக்கு முரசனுக்கு மாலை கழற்றுவதுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை, ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X