நகர்ப்புற குடியிருப்பு கட்டுமான பணி 'ஜவ்வு' எம்.ஜி.ஆர்., நகர் மக்கள் வேதனை

Added : செப் 12, 2022 | |
Advertisement
வியாசர்பாடி:வியாசர்பாடி, எம்.ஜி.ஆர்., நகர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளை இடித்து ஒன்றரை ஆண்டுகளாகியும், இதுவரை கட்டுமான பணிகள் துவக்கப்படாததால், பயனாளிகள் வேதனையில் உள்ளனர்.வியாசர்பாடி, எம்.ஜி.ஆர்., நகர் வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டன.இங்கு, 'ஏ' முதல் 'இ' வரை 'பிளாக்'குகள் உள்ளன. 'ஏ, பி
நகர்ப்புற குடியிருப்பு கட்டுமான பணி 'ஜவ்வு' எம்.ஜி.ஆர்., நகர் மக்கள் வேதனை

வியாசர்பாடி:வியாசர்பாடி, எம்.ஜி.ஆர்., நகர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளை இடித்து ஒன்றரை ஆண்டுகளாகியும், இதுவரை கட்டுமான பணிகள் துவக்கப்படாததால், பயனாளிகள் வேதனையில் உள்ளனர்.
வியாசர்பாடி, எம்.ஜி.ஆர்., நகர் வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டன.இங்கு, 'ஏ' முதல் 'இ' வரை 'பிளாக்'குகள் உள்ளன. 'ஏ, பி பிளாக்'குகளில், தலா 50 வீடுகளும்; 'சி, டி, இ பிளாக்'குகளில், தலா 36 வீடுகளில், 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.இக்கட்டடத்தின் பல இடங்களில் மேற்கூரை விரிசல் விழுந்து, மோசமான நிலையில் காட்சி அளிக்கிறது.
இதையடுத்து அபாயகரமான வீடுகளை இடித்து விட்டு, புதிய கட்டடங்கள் கட்ட, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் முடிவெடுத்தது. புதிதாக, 35 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில், 288 வீடுகள் கட்டப்பட உள்ளன.தரை தளத்துடன் ஐந்து மாடிகள் அமைய உள்ள இக்கட்டடத்தில் மின் துாக்கி வசதி, பால்கனி, மரக்கதவுகள், டைல்ஸ், வெஸ்டன் கழிவறை வசதியுடன், ஒரு வீடு 400 சதுரடியில் அமைய உள்ளது.
எம்.ஜி.ஆர்., நகரில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வசிப்பவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடந்தது. இவர்களுக்கு கடந்த 2020ம் ஆண்டு, ஒரு வீட்டிற்கு கருணைத் தொகையாக தலா 8,000 ரூபாயும், ஒதுக்கீட்டு ஆணையும் வழங்கப்பட்டது.பின், 2021 பிப்ரவரியில் வீடுகளும் இடிக்கப்பட்டன. இந்நிலையில், வீடுகள் இடிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாகியும், இதுவரை கட்டுமான பணிகள் துவக்கப்படவில்லை. இதனால், இந்த பகுதி மக்கள் கவலையில் உள்ளனர்.
இதுகுறித்து, இப்பகுதி மக்கள் கூறியதாவது:நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள், ஆறு மாதத்திற்குள் கட்டுமான பணிகள் துவங்குவதாக தெரிவித்தனர். வீடுகளை இடித்து ஒன்றரை ஆண்டுகளாகியும், இதுவரை அடித்தளம் கூட அமைக்கப்படவில்லை.வீடுகளை விட்டு வெளியில் தங்கியுள்ள பயனாளிகள், வாடகை செலுத்த முடியாமல் அவதியடைகின்றனர். ஏழ்மை நிலையில் உள்ள இப்பகுதி மக்களின் நலன் கருதி, விரைவில் கட்டுமான பணிகளை துவக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X