சாய்வதற்கு காத்திருக்கும் மரம்... காற்றடித்தால் கலங்குது மனம்!| Dinamalar

சாய்வதற்கு காத்திருக்கும் மரம்... காற்றடித்தால் கலங்குது மனம்!

Added : செப் 12, 2022 | |
நிறைந்த குப்பைதிருப்பூர் பி.என்., ரோடு, முனியப்பன் கோவில் முன்புறம் தொட்டியில் குப்பை நிறைந்து காணப்படுகிறது. குப்பை அள்ளிச் செல்ல மாநகராட்சி ஊழியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.-பாலன், பி.என்., ரோடு.சாயும் அபாயம்திருப்பூர் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன்புறம் மரம் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. மரம் விழும் முன் அகற்ற வேண்டும்.-பாலாஜி,
சாய்வதற்கு காத்திருக்கும் மரம்... காற்றடித்தால் கலங்குது மனம்!நிறைந்த குப்பை

திருப்பூர் பி.என்., ரோடு, முனியப்பன் கோவில் முன்புறம் தொட்டியில் குப்பை நிறைந்து காணப்படுகிறது. குப்பை அள்ளிச் செல்ல மாநகராட்சி ஊழியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.-பாலன், பி.என்., ரோடு.சாயும் அபாயம்திருப்பூர் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன்புறம் மரம் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. மரம் விழும் முன் அகற்ற வேண்டும்.-பாலாஜி, ராயபுரம்.எரியாத விளக்குதிருப்பூர், 19 வது வார்டு, டி.என்.கே., புரம் நான்காவது வீதியில் ஏழு மின்கம்பங்களிலும் தெருவிளக்கு எரிவதில்லை. எரியாத விளக்கை மாற்றி புதுவிளக்கு பொருத்த வேண்டும்.-ரஞ்சித்குமார், டி.என்.கே., புரம்.திருப்பூர் - பல்லடம் ரோடு, மகாலட்சுமி நகர் முதல் பல்லடம் ரவுண்டானா வரையில் உள்ள விளக்கு விட்டுவிட்டு எரிகிறது. எரியாத விளக்குகளை மாற்றி புதிய விளக்கு பொருத்த வேண்டும்.-பாஸ்கர், மகாலட்சுமி நகர்.வீணாகும் நீர்திருப்பூர், 26வது வார்டு, காலேஜ் ரோடு, பிரேமா ஸ்கூல் முதல் வீதியில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. சரிசெய்ய மாநகராட்சி ஊழியர்கள் முன்வர வேண்டும்.-பழனிச்சாமி, காலேஜ் ரோடு.திருப்பூர், 19வது வார்டு, சந்திரா காலனி - காமாட்சி அம்மன் கோவில் வீதி பகுதியில் கால்வாய்க்கு கீழ் செல்லும் குழாய் உடைந்து தண்ணீர் வெளியாகிறது. சரிசெய்ய வேண்டும்.-சுந்தர்ராஜன், சந்திரா காலனி.கால்வாய் அடைப்புதிருப்பூர் பலவஞ்சிபாளையம் பிரிவு, அப்பாவு நகரில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் செல்கிறது. அடைப்பை சரிசெய்ய வேண்டும்.-செந்தில்நாதன், அப்பாவு நகர்.செல்வதே சிரமம்சுல்தான்பேட்டை, அப்பியங்காடு, குமரன் தெருவில் சாலை அமைக்க ஜல்லி கொட்டி பல நாட்களாகிறது. வாகன ஓட்டிகள் சென்று வர சிரமமாக உள்ளது. ரோடு போட வேண்டும்.-கோகுலகிருஷ்ணன், சுல்தான்பேட்டை.சுகாதாரக்கேடுஅவிநாசி, வேட்டு வபாளையம் அடுத்த, அசநல்லிபாளையம் தேவேந்திரன் நகரில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. மழைநீருடன், கழிவுநீர் கலந்து தேங்கி நிற்பதால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இப்பகுதிக்கு கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.-கோகுல், அசநல்லிபாளையம்.சாலை சேதம்திருப்பூர், பல்லடம் ரோடு, நொச்சிபாளையம் பிரிவில் குழாய் உடைந்து தண்ணீர் தொடர்ந்து வீணாகிறது. பலமுறை புகார் தெரிவித்தும், சரிசெய்யவே இல்லை. சாலை சேதமாகிறது.-ஈஸ்வரமூர்த்தி, நொச்சிபாளையம் பிரிவு.கிளைகளால் இடைஞ்சல்திருப்பூர், காங்கயம் ரோட்டில் இருந்து போக்குவரத்து கழக டிப்போ செல்லும் சாலையில், மரக்கிளைகள் ரோட்டில் போட்டு வைக்கப்பட்டுள்ளது. அகற்றினால், இடைஞ்சல் குறையும்.-சீனிவாசன், காங்கயம் ரோடு.மின்சாரம் வீண்திருப்பூர் - ஏ.பி.டி., ரோட்டில் பகலிலும் தெருவிளக்கு எரிந்து மின்சாரம் வீணாகிறது. சரியான நேரத்துக்கு விளக்குகளை அணைத்து, மின்சாரம் வீணாவதை தடுக்க வேண்டும்.-சங்கர்சதீஷ், கருவம்பாளையம்.சிக்னல் பழுதுதிருப்பூர் - பல்லடம் ரோடு, சந்தைபேட்டை - தென்னம்பாளையம் பஸ் ஸ்டாப்பில் சிக்னல் பழுதாகியுள்ளது. வாகனங்கள் விதிமீறி தாறுமாறாக செல்கின்றன. சிக்னலை சரிசெய்ய வேண்டும்.- முத்துப்பாண்டி, பல்லடம் ரோடு.சுற்றுச்சூழல் கேடுதிருப்பூர் ஜெய்வாபாய் ஸ்கூல் - நஞ்சப்பா ஸ்கூல் சந்திப்பு வீதியில் குப்பை அள்ள வேண்டும். ரோட்டில் கொட்டப்படும் குப்பையால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.-ராஜேஷ்குமார், ராயபுரம்.சுத்தமான நடைபாதைதிருப்பூர், ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் எதிர்புறம் சுரங்கபாலத்தின் கீழ் சேறும், சகதியுமாக இருந்தது. 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியான பின், சுத்தம் செய்யப்பட்டுள்ளது. 'தின மலர்' நாளிதழுக்கு நன்றி.-மாரிமுத்து, காதர்பேட்டை.தெருவிளக்கு எரிகிறதுதிருப்பூர் கருப்பகவுண்டம்பாளையம் மெயின் ரோட்டில் தெருவிளக்கு எரியாமல் இருள்சூழ்ந்து காணப்பட்டது. 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியான பின், புதிய விளக்கு பொருத்தப்பட்டு விட்டது. நன்றி.-ரவிக்குமார், கருப்பகவுண்டம்பாளையம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X