கடுமையாக சிதிலமடைந்த சாலை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

Added : செப் 12, 2022 | |
Advertisement
செங்குன்றம்:மழைநீர் தேங்கி சிதிலமடைந்த சாலையை, விபத்தை தவிர்க்கும் வகையில் சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.சென்னை செங்குன்றம் சோத்துப்பாக்கம் சாலை, சுற்றுவட்டார கிராமங்களின் போக்குவரத்திற்கான அத்தியாவசிய சாலையாக உள்ளது. இந்த சாலையை ஒட்டி புள்ளிலைன், தீர்த்தகிரையம்பட்டு, பள்ளிக்குப்பம், அத்திவாக்கம் கோட்டூர், விளாங்காடு
கடுமையாக சிதிலமடைந்த சாலை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

செங்குன்றம்:மழைநீர் தேங்கி சிதிலமடைந்த சாலையை, விபத்தை தவிர்க்கும் வகையில் சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
சென்னை செங்குன்றம் சோத்துப்பாக்கம் சாலை, சுற்றுவட்டார கிராமங்களின் போக்குவரத்திற்கான அத்தியாவசிய சாலையாக உள்ளது. இந்த சாலையை ஒட்டி புள்ளிலைன், தீர்த்தகிரையம்பட்டு, பள்ளிக்குப்பம், அத்திவாக்கம் கோட்டூர், விளாங்காடு பாக்கம், கும்மனுார், பூதுார் என, 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

மேலும், செங்குன்றம் சார் - பதிவாளர் மற்றும் மின்வாரிய அலுவலகங்களும் உள்ளன. அவை தவிர, தனியார் மகளிர் கல்லுாரி, அரிசி ஆலை மற்றும் குடோன்கள் உள்ளிட்ட, பல்வேறு தனியார் தொழிற்சாலைகளுக்கான கனரக மற்றும் சரக்கு பெட்டக வாகனங்களின் போக்குவரத்து அதிகரித்து உள்ளது.அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி, மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக, மேற்கண்ட அனைத்து கிராமத்தினரும், செங்குன்றத்திற்கு வந்து செல்ல, சோத்துப்பாக்கம் சாலையைத் தான் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், கிராமங்களின் மாநகர போக்குவரத்து வசதிக்காக, 60 அடி சாலையாக இருந்த அந்த சாலை, பல்வேறு தனியார் ஆக்கிரமிப்புகளால், 20 முதல் 25 அடி சாலையாக சுருங்கி விட்டது. அதனால், மாநகர பேருந்து மற்றும் அவசர உதவிக்கான ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள், விரைந்து செல்ல முடியாத நிலை உள்ளது.
அதனால், அந்த சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற, பொதுமக்களின் கோரிக்கை, பல ஆண்டாக கிடப்பில் உள்ளது. ஆக்கிரமிப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலால் தினமும் அவதிப்படும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், தற்போது,சிதிலமடைந்த சாலையால், மேலும் அவதிப்படுகின்றனர்.

குறிப்பாக, தீர்த்தகிரையம்பட்டு மின்வாரிய அலுவலகம் அருகே, சிறிய ரக வாகனங்கள், கவிழும் நிலையில், சாலையில் பள்ளங்கள் உள்ளன.அதனால், ஆட்டோ, இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் உட்பட பலரும், விபத்தில் சிக்கும் அச்சத்திற்கு ஆளாகின்றனர். மேலும், சாலை விளக்கு வசதியின்றி, இருள் மூழ்கிய நிலையால், இரவில் சாலை எது? பள்ளம் எது என தெரியாத நிலையில், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவது தொடர்கிறது.
மேற்கண்ட பிரச்னைகளுக்கு தீர்வாக, சாலையை விரிவாக்கம் செய்து, சீரமைக்க வேண்டும். குறிப்பாக, பருவ மழைக்கு முன், சிதிலமடைந்த சாலையை சீரமைத்து, விபத்து உயிரிழப்பை தவிர்க்க, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X