சூரியகாந்திக்கு மாற தயாராகும் விவசாயிகள்| Dinamalar

சூரியகாந்திக்கு மாற தயாராகும் விவசாயிகள்

Added : செப் 12, 2022 | |
பொங்கலுார்:வெங்காயம், தக்காளி, கத்தரி உள்ளிட்ட காய்கறி பயிர்களுக்கு கடந்த ஓராண்டுக்கு மேலாக, விவசாயிகளுக்கு, கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை.காய்கறி பயிர் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு தொடர் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. விவசாயிகள் பாதுகாப்பான மாற்று பயிர் சாகுபடிக்கு மாற துவங்கியுள்ளனர்.முன்பு திருப்பூர் மாவட்டத்தில் கணிசமான பரப்பளவில் சூரியகாந்தி சாகுபடி
சூரியகாந்திக்கு மாற தயாராகும் விவசாயிகள்

பொங்கலுார்:வெங்காயம், தக்காளி, கத்தரி உள்ளிட்ட காய்கறி பயிர்களுக்கு கடந்த ஓராண்டுக்கு மேலாக, விவசாயிகளுக்கு, கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை.காய்கறி பயிர் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு தொடர் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. விவசாயிகள் பாதுகாப்பான மாற்று பயிர் சாகுபடிக்கு மாற துவங்கியுள்ளனர்.முன்பு திருப்பூர் மாவட்டத்தில் கணிசமான பரப்பளவில் சூரியகாந்தி சாகுபடி செய்யப்பட்டு வந்தது. காலநிலை மாற்றம், விலை வீழ்ச்சி போன்ற பிரச்னைகள்தலைதுாக்கியதால் விவசாயிகள் சூரியகாந்தி சாகுபடியை படிப்படியாக குறைத்தனர்.வெள்ளகோவில், மூலனுார் பகுதியில் மட்டும் சிறிய பரப்பில் சூரியகாந்தி சாகுபடி செய்யப்பட்டு வந்தது. தற்போது சூரியகாந்தி ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விலை போகிறது. நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் சூரியகாந்தியின் பக்கம் கவனம் செலுத்த துவக்கியுள்ளனர்.விவசாயிகள் கூறுகையில், ''காலநிலை மாற்றத்தால் பருவம் தவறிப் பெய்யும் மழையால் மகரந்த சேர்க்கை ஏற்படாமல் விளைச்சல் கிடைப்பதில்லை. சூரியகாந்திக்கு கார்த்திகை மற்றும் வைகாசி பட்டம் சிறந்தது.அறுவடை நேரத்தில் நல்ல வெயில் கிடைக்க வேண்டும். உயிர்வேலி அழிப்பு, காடழிப்பு போன்றவற்றால் பறவைகளுக்கு உணவு தட்டுப்பாடு நிலவுகிறது. கிளி, மயில் உள்ளிட்ட பறவைகள் சூரியகாந்திக்கு அதிக சேதம் விளைவிக்கின்றன.சாகுபடி அதிகரிக்கும் போது சேதம் குறையும். பருவநிலை மாற்றம் சூரியகாந்தி சாகுபடியை தீர்மானிக்கிறது. இதற்கு அரசு தான் தீர்வு காண வேண்டும்'' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X