மண்டல அளவில் கால்பந்து: நடுவர்களுக்கான தேர்வு

Added : செப் 12, 2022 | |
Advertisement
கோவை:மண்டல அளவில் கால்பந்து நடுவர்களுக்கான உடல் தேர்வு மற்றும் எழுத்து தேர்வு பாரதியார் பல்கலை வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.தமிழ்நாடு கால்பந்து கழகம் மற்றும் கோவை மாவட்ட கால்பந்து கழகம் (அட்ஹாக் கமிட்டி) சார்பில், மண்டல அளவில் கால்பந்து நடுவர்களுக்கான தேர்வு கோவையில் நடந்தது.இதில், கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதியிலிருந்து, 70க்கும் மேற்பட்டோர்
மண்டல அளவில் கால்பந்து: நடுவர்களுக்கான தேர்வு

கோவை:மண்டல அளவில் கால்பந்து நடுவர்களுக்கான உடல் தேர்வு மற்றும் எழுத்து தேர்வு பாரதியார் பல்கலை வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.தமிழ்நாடு கால்பந்து கழகம் மற்றும் கோவை மாவட்ட கால்பந்து கழகம் (அட்ஹாக் கமிட்டி) சார்பில், மண்டல அளவில் கால்பந்து நடுவர்களுக்கான தேர்வு கோவையில் நடந்தது.இதில், கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதியிலிருந்து, 70க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.ரேஸ்கோர்ஸ், பிஷப் அப்பாசாமி கல்லுாரியில் நடந்த முதல் இரண்டு நாள்கள் கால்பந்து விளையாட்டு குறித்து விதிமுறை, நடுவர்களின் கடமை, போட்டி அடிப்படை போன்ற பல்வேறு தகவல்களை நடுவர்களுக்கான பயிற்சியில் தேர்வாளர் பகவதிராஜ் கற்றுக்கொடுத்தார்.தொடர்ந்து, உடல் தகுதி தேர்வும் மற்றும் எழுத்து தேர்வு பாரதியார் பல்கலை வளாகத்தில் நேற்றுமுன்தினம் நடந்தது. இத்தகவலை கோவை மாவட்ட கால்பந்து கழகம் (அட்ஹாக் கமிட்டி) நிர்வாகிகள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X