ஒரு மழைக்கு தாங்காத உப்பிலிபாளையம் சாலை!

Added : செப் 12, 2022 | |
Advertisement
வாகன ஓட்டிகள் அவதி சிங்காநல்லூர் அருகே பெர்க்ஸ் பள்ளி முன் உள்ள சாலை சமீபத்தில் புதிதாக அமைக்கப்பட்டது. ஒரு மழைக்கே சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது. அவிநாசி ரோட்டையும்- திருச்சி ரோட்டையும் இணைக்கும் பிரதான சாலையில் வாகன ஓட்டிகள் அவதி தொடர்கதையாகியுள்ளது.- அகிலாதேவி, சிங்கநல்லுார். வீட்டுக்குள் வரும் கழிவுநீர்கணபதி, மீனாட்சி நகர், பி. அண்ட். டி.,


வாகன ஓட்டிகள் அவதி



சிங்காநல்லூர் அருகே பெர்க்ஸ் பள்ளி முன் உள்ள சாலை சமீபத்தில் புதிதாக அமைக்கப்பட்டது. ஒரு மழைக்கே சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது. அவிநாசி ரோட்டையும்- திருச்சி ரோட்டையும் இணைக்கும் பிரதான சாலையில் வாகன ஓட்டிகள் அவதி தொடர்கதையாகியுள்ளது.- அகிலாதேவி, சிங்கநல்லுார்.


வீட்டுக்குள் வரும் கழிவுநீர்


கணபதி, மீனாட்சி நகர், பி. அண்ட். டி., காலனி பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர், குழாய்கள் வழியாக வீட்டுக்குள் வருகிறது. துர்நாற்றம் வீசுகிறது. சுத்தம் செய்ய ஆட்கள் வரவில்லை. இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.- சாரா, கணபதி.


வீணாகும் தண்ணீர்





தெலுங்குபாளையம், பிரியா நகரில் உள்ள உப்பு தண்ணீர் குழாய் உடைந்து மூன்று வாரங்களாக தண்ணீர் வீணாகிறது. இதுவரை எந்த அதிகாரிகளும் சரி செய்ய முன்வரவில்லை. தினமும் தண்ணீர் சாலையில் செல்கிறது.- கதிர்வேல், பிரியா நகர்.


சாலையில் கிடக்கும் ஒயர்


பொன்னையராஜபுரம், கோபால் லே- அவுட் பகுதியில் கடந்த 10 நாட்களாக, கேபிள் ஒயர் சாலையின் குறுக்கே கிடக்கிறது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் கீழே விழும் அபாயமும் உள்ளது. விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்கவேண்டும்.- குருமூர்த்தி, பொன்னையராஜபுரம்.


தேங்கி கிடக்கும் குப்பை


பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம் ஊராட்சி, பாலமலை ரோடு, தாமு நகர் மூன்றாவது வீதியில் பல நாட்களாக குப்பை அகற்றாமல் உள்ளனர். குப்பைத்தொட்டி நிறைந்து சுற்றியுள்ள பகுதிகளிலும் குப்பை நிறைந்து இருக்கிறது. வார்டு கவுன்சிலர், ஊராட்சி தலைவர்கள் நேரில் ஆய்வு செய்தும், நடவடிக்கை எடுக்கவில்லை.-மோகன் ராஜ், பாலமலை.


தெரு விளக்கு எரியவில்லை


சிங்கநல்லுார், நஞ்சப்பா நகர், முதல் தெருவில் கடந்த இரண்டு வாரங்களாக தெரு விளக்கு எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் இப்பகுதியில் இருட்டாக உள்ளது. பெண்கள் குழந்தைகள் அச்சப்படுகின்றனர். -மணிகண்டன், சிங்கநல்லுார்.


மின் கம்பியால் ஆபத்து





சிங்காநல்லுார், விவேகானந்தா நகரில் உள்ள தெருவிளக்கு கம்பத்தில் ஒரு மின் கம்பி கட்டாகி தொங்கிக் கொண்டு உள்ளது. அந்த கம்பியில் மின்சாரம் உள்ளதா, இல்லையா என்பது தெரியாமல் பயத்துடன் அந்த தெருவில் செல்ல வேண்டியுள்ளது. அதனை சரிசெய்து அபாயத்தை தடுக்கவேண்டும்.-ஏகாம்பரம், விவேகானந்தா நகர்.


பேருந்து வசதி வேண்டும்


இருகூரில் மீனா பர்னிச்சர் சாலையில், ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது. அதுவும் குறித்த நேரத்தில் வருவதில்லை. ஷேர் ஆட்டோ வசதியும் கிடையாது. வெளியே சென்று வர மிகவும் சிரமமாக இருக்கிறது. போதுமான பேருந்து அல்லது ஷேர் ஆட்டோ வசதி செய்து தர வேண்டும்.- விஜயலட்சுமி,

இருகூர்.


ஆமை வேகம்


குறிச்சி மண்டலம், 85வது வார்டு கோணவாய்க்கால் பாளையம் பகுதியில் பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழி பல மாதங்களாக மூடப்படாமல் உள்ளது. ஆமை வேகத்தில் நடக்கும் வேலையால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதியடைகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- முத்துக்குமார், கோணவாய்க்கால்பாளையம்.


சாய்ந்து நிற்கும்




மின்கம்பம்


மாநகராட்சிக்குட்பட்ட 26வது வார்டு, பீளமேடு லால்பகதுார் காலனியில் உள்ள மின் கம்பம் ஒன்று சாய்ந்து விழும் நிலையில் இருக்கிறது.பொது மக்கள் மீது விழுந்து விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்கவேண்டும்.- பழனிசாமி, பீளமேடு.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X