காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை| Dinamalar

காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

Added : செப் 12, 2022 | |
சோழிங்கநல்லுார்:காரப்பாக்கத்தில் உள்ள காளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.ஓ.எம்.ஆர்., காரப்பாக்கம், ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முதல் நாள் விநாயகர் வழிபாடு, எஜமானர் பக்த கோடிகள் சங்கல்பம், தனபூஜை, கோபூஜை, புனித நீர் கொண்டு வருதல், கணபதி ஹோமம், யாகசாலை பிரவேசம், பிரதிஷ்டை அஷ்டபந்தனம் சாத்துதல் உள்ளிட்ட பூஜைகள்

சோழிங்கநல்லுார்:காரப்பாக்கத்தில் உள்ள காளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


ஓ.எம்.ஆர்., காரப்பாக்கம், ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முதல் நாள் விநாயகர் வழிபாடு, எஜமானர் பக்த கோடிகள் சங்கல்பம், தனபூஜை, கோபூஜை, புனித நீர் கொண்டு வருதல், கணபதி ஹோமம், யாகசாலை பிரவேசம், பிரதிஷ்டை அஷ்டபந்தனம் சாத்துதல் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.


நேற்று முன்தினம், இரண்டாவது கால யாக பூஜை, வேதாபாராயணம், யாகசாலையில் இருந்து கலசம் புறப்படுதல் நடந்தது. தொடர்ந்து, காளியம்மன் கருவறை விமான மஹா கும்பாபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.மாலை, ஊரணி பொங்கல் வைத்து தீபாராதனை மற்றும் வாணவேடிக்கையுடன் அம்மன் திருவீதி உலா வருதல் நடைபெற்றது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X