பயணிகள் கூட்டம்: போக்குவரத்து நெரிசலால் அவதி

Added : செப் 12, 2022 | |
Advertisement
ஊட்டி:ஊட்டியில் இரண்டாவது சீசன் துவங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளில் வருகை அதிகரித்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.கேரளாவில் ஓணம் பண்டிகையை ஒட்டி, கடந்த மூன்று நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் ஊட்டியில் அதிகரித்திருந்தது. சுற்றுலா வாகனங்கள் ஆயிரக்கணக்கில் வந்ததால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக, ஊட்டி--குன்னுார்
பயணிகள் கூட்டம்: போக்குவரத்து நெரிசலால் அவதி

ஊட்டி:ஊட்டியில் இரண்டாவது சீசன் துவங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளில் வருகை அதிகரித்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.கேரளாவில் ஓணம் பண்டிகையை ஒட்டி, கடந்த மூன்று நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் ஊட்டியில் அதிகரித்திருந்தது. சுற்றுலா வாகனங்கள் ஆயிரக்கணக்கில் வந்ததால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக, ஊட்டி--குன்னுார் சாலை, ஊட்டி--கூடலுார் சாலை, படகு இல்லம் சாலைகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து ஊர்ந்து சென்றன. சுற்றுலா பயணிகள். தாங்கள் திட்டமிட்டபடி பல சுற்றுலா ஸ்தலங்களை கண்டு ரசிக்க முடியாமல் அவதி அடைந்தனர்.ஊட்டியில் இருந்து லவ்டேல் சந்திப்பு, பிங்கர்போஸ்ட், மேல் கோடப்பமந்து சாலைகளில் செல்லும் வாகனங்கள் நெரிசல் காரணமாக ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால், பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. படகு இல்லம் சாலையில், வார இறுதி நாட்களில் கூடுதல் போலீசார் நியமிக்காததால் நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டது.உள்ளூர் நகர பஸ்கள் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல முடியாமல் பொது மக்கள் மழையில் நனைந்தபடி நடந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இனி வரும் நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகையை கருத்தில் கொண்டு, போக்குவரத்து பிரச்னையை சமாளிக்க கூடுதல் போலீசாரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X