வாட்டுது குளிரு; கிடைக்கல ஸ்வெட்டரு| Dinamalar

வாட்டுது குளிரு; கிடைக்கல ஸ்வெட்டரு

Added : செப் 12, 2022 | |
வால்பாறை:வால்பாறையில் கடுங்குளிர் நிலவும் நிலையில், ஸ்வெட்டர் வழங்காததால் மாணவர்கள் குளிரில் நடுங்குகின்றனர்.வால்பாறை தாலுகாவில், 72 அரசு துவக்கப்பள்ளி, 8 அரசு நடுநிலைப்பள்ளிகளில், 1,998 மாணவர்கள் படிக்கின்றனர். கோவை மாவட்டம் வால்பாறையில் ஆண்டு முழுவதும் கடுங்குளிரும், மழையும் பொழிவதால், அரசுப்பள்ளிகளில், எட்டாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஸ்வெட்டர்

வால்பாறை:வால்பாறையில் கடுங்குளிர் நிலவும் நிலையில், ஸ்வெட்டர் வழங்காததால் மாணவர்கள் குளிரில் நடுங்குகின்றனர்.வால்பாறை தாலுகாவில், 72 அரசு துவக்கப்பள்ளி, 8 அரசு நடுநிலைப்பள்ளிகளில், 1,998 மாணவர்கள் படிக்கின்றனர். கோவை மாவட்டம் வால்பாறையில் ஆண்டு முழுவதும் கடுங்குளிரும், மழையும் பொழிவதால், அரசுப்பள்ளிகளில், எட்டாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஸ்வெட்டர் வழங்கப்படுகிறது. வால்பாறையில் இந்த கல்வியாண்டில் படிக்கும் மாணவர்களுக்கு, இதுவரை ஸ்வெட்டர் வழங்கவில்லை. இதனால், மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இதுகுறித்து, மாணவர்கள் கூறுகையில், 'வால்பாறையில் கடந்த மூன்று மாதமாக கடுங்குளிரும், பனிப்பொழிவும் அதிகமாக காணப்படுகிறது. இதனால், அதிகாலை நேரத்தில் எஸ்டேட் பகுதியில் இருந்து வால்பாறை நகர் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு வரும் போது கடுங்குளிரால் தவிக்கிறோம். ரெயின்கோட், ஸ்வெட்டர், பேக் உள்ளிட்டவை வழங்கவில்லை,' என்றனர்.கல்வி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'வால்பாறையில் உள்ள அரசு பள்ளிகளில், எட்டாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு, ஆண்டு தோறும் ஸ்வெட்டர் வழங்கப்படுகிறது. இந்த கல்வி ஆண்டிற்கு, ஸ்வெட்டர், ஸ்கூல்பேக், ரெயின்கோட் உள்ளிட்டவை, அரசு சார்பில் இதுவரை வினியோகிக்கவில்லை.அவைகள் வழங்கப்பட்டதும், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் வாயிலாக உடனடியாக மாணவர்களுக்கு வழங்கப்படும்,' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X