வட்டார சுகாதார சபையில் தேவை குறித்து பட்டியல்

Added : செப் 12, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி;பொள்ளாச்சி, சூளேஸ்வரன்பட்டியில் வட்டார சுகாதார சபை நடந்தது. சுகாதாரத்துறை மாவட்ட உதவி திட்ட மேலாளர் டாக்டர் ராமநாதன் தலைமை வகித்தார். வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.செவிலியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் பங்கேற்று குறைகளை தெரிவித்தனர்.டாக்டர்கள் கூறியதாவது: தமிழக அரசு, வட்டார
வட்டார சுகாதார சபையில் தேவை குறித்து பட்டியல்

பொள்ளாச்சி;பொள்ளாச்சி, சூளேஸ்வரன்பட்டியில் வட்டார சுகாதார சபை நடந்தது. சுகாதாரத்துறை மாவட்ட உதவி திட்ட மேலாளர் டாக்டர் ராமநாதன் தலைமை வகித்தார். வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.செவிலியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் பங்கேற்று குறைகளை தெரிவித்தனர்.டாக்டர்கள் கூறியதாவது: தமிழக அரசு, வட்டார சுகாதார சபை நடத்த அறிவுறுத்தியுள்ளது. இதில், ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் ரோடு வசதி, பஸ் வசதி, ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்கள் பற்றாக்குறை, கட்டடம், உபகரணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து கேட்டறியப்படுகின்றன. மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு பிரச்னைகள் குறித்து அனுப்பப்படும். மாவட்ட அளவில் சபை நடத்தப்பட்டு, பிரச்னைகளை தொகுத்து, மாநில அளவில் அனுப்பப்பட்டு, அரசின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும்.எந்த துறை வாயிலாக பிரச்னையை சரி செய்ய வேண்டுமோ, அந்த துறையினருக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X