அதிக ஒலி எழுப்பும் 'ஹாரன்'கள் கட்டுப்படுத்த வலியுறுத்தல்

Added : செப் 12, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம் : வாகனங்களில் பொருத்தப்படும் 'ஹாரன்'கள் அனுமதிக்கப்பட்டுள்ள அளவில் ஒலி எழுப்பும் திறன் கொண்டதை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு வாகனத்திற்கும் வெவ்வேறு மாதிரி ஒலி எழுப்பக் கூடிய ஹாரன்கள் உள்ளன. அந்த ஒலி பொது மக்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். தற்போது அவ்வாறு இல்லாமல் சாதாரண இரு சக்கர வாகனங்களில் காருக்கு பொருத்தப்படும் ஹாரன்கள்


காஞ்சிபுரம் : வாகனங்களில் பொருத்தப்படும் 'ஹாரன்'கள் அனுமதிக்கப்பட்டுள்ள அளவில் ஒலி எழுப்பும் திறன் கொண்டதை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு வாகனத்திற்கும் வெவ்வேறு மாதிரி ஒலி எழுப்பக் கூடிய ஹாரன்கள் உள்ளன. அந்த ஒலி பொது மக்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்.

தற்போது அவ்வாறு இல்லாமல் சாதாரண இரு சக்கர வாகனங்களில் காருக்கு பொருத்தப்படும் ஹாரன்கள் பொருத்தி ஒலி எழுப்பி செல்கின்றனர். கார், ஆட்டோக்கள் என அனைத்தும் பல விதமான அதிக ஒலியை ஏற்படுத்தும் ஹாரன்களை பயன்படுத்தி வருகின்றனர்.தனியார் பேருந்துகளில் ஒரே நேரத்தில் பல விதமான ஒலியை எழுப்பும் ஏர் ஹாரன்கள் பயன்படுத்து கின்றனர்.அவ்வாறு அதிக ஒலி எழுப்பும் ஹாரன் உடைய கனரக வாகனங்கள் சாலையில் செல்லும் போது இரு சக்கர வாகனங்கள் அருகில் சென்று ஒலி எழுப்பும் போது சில நேரங்களில் அவர்கள் நிலை தடுமாறி விபத்து ஏற்படுகிறது.

அதிக ஒலி எழுப்பக்கூடிய ஹாரன்களை பறிமுதல் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:அனைத்து வாகனங்களிலும் 80 டெசிபெல் ஒலியின் அளவு இருக்கக் கூடிய ஹாரன்கள் மட்டும் பயன்படுத்த வேண்டும். அதற்கு மேல் சத்தம் அதிகரித்தால் பொது மக்களுக்கு செவி பாதிப்பை ஏற்படுத்தும். அந்த மாதிரி ஹாரன்களை பயன்படுத்த கூடாது. மீறும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X