மதுரை ஆவினுக்குள் நுழைந்து ஊழியரை தாக்கிய பெண் கான்ட்ராக்டரின் கணவர் போலீஸ் சமரசம்; அச்சத்தில் ஊழியர்கள்

Added : செப் 12, 2022 | |
Advertisement
மதுரை : மதுரை ஆவினில் ஒப்பந்த தொழிலாளர்கள் எண்ணிக்கையை அதிகரித்து மோசடிக்கு உடன்படாத ஊழியரை அலுவலகத்திற்குள் நுழைந்து பெண் கான்ட்ராக்டரின் கணவர் தாக்கிய சம்பவத்தால் ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர்.ஆவினில் பண்ணைப் பிரிவு, பை பிரிவு, டப்பா அடுக்குதல், நெய் பிரிவு, தயாரிப்பு உள்ளிட்ட பிரிவுகளில் ஒப்பந்த அடிப்படையில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.



மதுரை : மதுரை ஆவினில் ஒப்பந்த தொழிலாளர்கள் எண்ணிக்கையை அதிகரித்து மோசடிக்கு உடன்படாத ஊழியரை அலுவலகத்திற்குள் நுழைந்து பெண் கான்ட்ராக்டரின் கணவர் தாக்கிய சம்பவத்தால் ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர்.

ஆவினில் பண்ணைப் பிரிவு, பை பிரிவு, டப்பா அடுக்குதல், நெய் பிரிவு, தயாரிப்பு உள்ளிட்ட பிரிவுகளில் ஒப்பந்த அடிப்படையில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இந்த தொழிலாளர்களுக்கான கான்ட்ராக்டை ஆளும் கட்சி பிரமுகர்கள் பெற்றுள்ளனர். ஒவ்வொரு மாதமும் இந்த தொழிலாளர்களுக்கான சம்பளம் 'பில்' தொகை கான்ட்ராக்டர்களிடம் வழங்கப்படும்.

பண்ணை பிரிவில் பணியாற்றிய தொழிலாளர்கள் எண்ணிக்கை குறித்து 'பில்' தயாரிக்கும் பணி நேற்று முன்தினம் நடந்தது. அங்குவந்த பெண் கான்ட்ராக்டரின் அலுவலக மேற்பார்வையாளரிடம், 'கைரேகை வருகை பதிவை சரிபார்த்த பின்பே தொழிலாளர் எண்ணிக்கை விவரம் தயாராகும் என அங்கிருந்த ஊழியர் தெரிவித்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த மேற்பார்வையாளர், பெண் கான்ட்ராக்டரிடம் தகவல் தெரிவித்தார். சில நிமிடங்களில் கான்ட்ராக்டரின் கணவர் பண்ணைப் பிரிவுக்கு வந்து அந்த ஊழியரை உதைத்து தாக்குதலில் ஈடுபட்டார். அங்கிருந்த ஊழியர்கள் அவரை தடுத்து வெளியேற்றினர். பாதிக்கப்பட்டவர் அண்ணாநகர் போலீசில் புகார் அளித்தார். கான்ட்ராக்டர் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரிக்கின்றனர்.


'கட்டிப்போடுது' அமைச்சர்கள் சிபாரிசு

இப்பிரச்னை குறித்து ஆவின் ஊழியர்கள் கூறியதாவது: ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் 'பில்' மோசடிக்கு ஒத்துழைப்பு அளிக்காத ஆவின் மேலாளர்கள், ஊழியர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர். இதற்கு முன் மேலாளர் ஒருவரை அலைபேசி 'வாட்ஸ்ஆப்' காலில் பேசிய கான்ட்ராக்டர் கத்தியை காண்பித்து மிரட்டினார். தற்போது கான்ட்ராக்டரின் கணவர் அலுவலகத்திற்குள் நுழைந்து தாக்கியுள்ளார்.

அதிகாரி முதல் ஊழியர் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை.சம்பந்தப்பட்ட இரு கான்ட்ராக்டர்களுமே ஆளும் கட்சி அமைச்சர்கள் சிபாரிசில் ஒப்பந்தம் பெற்றவர்கள். அவர்களை அதிகாரிகளால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டுள்ளன. ஆவினுக்கு நிதியிழப்பு ஏற்படும் இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலினுக்கு விரிவாக புகார் அனுப்ப உள்ளோம், என்றனர்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X