எம்.எல்.ஏ.,வின் பணியாளர் ரயில் நிலையத்தில் மீட்பு| Dinamalar

எம்.எல்.ஏ.,வின் பணியாளர் ரயில் நிலையத்தில் மீட்பு

Added : செப் 12, 2022 | |
பெங்களூரு-காங்கிரஸ்- எம்.எல்.ஏ., தினேஷ் குண்டுராவ் வீட்டில் பணியாற்றி வந்த நபர், மூன்று நாட்களுக்கு முன் காணாமல் போனார். இவரை போலீசார் கண்டுபிடித்தனர்.பெங்களூரின், காந்திநகர் தொகுதி காங்., - எம்.எல்.ஏ., தினேஷ் குண்டுராவ். இவரது இல்லத்தில், மேற்கு வங்கத்தை சேர்ந்த சஞ்சு ஷர்மா, 41 என்பவர் மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இவர், மூன்று நாட்களுக்கு முன், திடீரென காணாமல்



பெங்களூரு-காங்கிரஸ்- எம்.எல்.ஏ., தினேஷ் குண்டுராவ் வீட்டில் பணியாற்றி வந்த நபர், மூன்று நாட்களுக்கு முன் காணாமல் போனார். இவரை போலீசார் கண்டுபிடித்தனர்.பெங்களூரின், காந்திநகர் தொகுதி காங்., - எம்.எல்.ஏ., தினேஷ் குண்டுராவ். இவரது இல்லத்தில், மேற்கு வங்கத்தை சேர்ந்த சஞ்சு ஷர்மா, 41 என்பவர் மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இவர், மூன்று நாட்களுக்கு முன், திடீரென காணாமல் போனார்.இது குறித்து, போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவானது. சஞ்சு ஷர்மாவின் போட்டோ, ரயில் நிலையம், பஸ் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டது. சிட்டி ரயில் நிலையத்தில், நேற்று அவரை போலீசார் கண்டுபிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது, 'எனக்கு பெங்களூரில் பணியாற்ற விருப்பமில்லை. என் குடும்பத்தினர் நெருக்கடி கொடுக்கின்றனர். எனவே வேலையை விட்டு வெளியேறினேன்' என்றார்.அவரை, தினேஷ் குண்டுராவ் வீட்டுக்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X