வனத்துறை தியாகிகள் நிவாரண நிதி ரூ.50 லட்சமாக உயர்த்தினார் முதல்வர்

Added : செப் 12, 2022 | |
Advertisement
பெங்களூரு-''வனத்துறை தியாகிகளின் குடும்பத்தினர் தைரியமாகவும், பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் செயல்படுவதால், அவர்களுக்கான இழப்பீடு தொகை 30 லட்சத்தில் இருந்து 50 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்,'' என முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்தார்.வனத்துறை சார்பில், பெங்களூரில் நேற்று நடந்த தேசிய வன தியாகிகள் தினத்தில், முதல்வர் பசவராஜ் பொம்மை பங்கேற்று, பணியின் போது
வனத்துறை தியாகிகள் நிவாரண நிதி ரூ.50 லட்சமாக உயர்த்தினார் முதல்வர்



பெங்களூரு-''வனத்துறை தியாகிகளின் குடும்பத்தினர் தைரியமாகவும், பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் செயல்படுவதால், அவர்களுக்கான இழப்பீடு தொகை 30 லட்சத்தில் இருந்து 50 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்,'' என முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்தார்.வனத்துறை சார்பில், பெங்களூரில் நேற்று நடந்த தேசிய வன தியாகிகள் தினத்தில், முதல்வர் பசவராஜ் பொம்மை பங்கேற்று, பணியின் போது உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.இதில், அவர் பேசியதாவது:முன்னாள் முதல்வர் எடியூரப்பா, வனத்துறையில் பணியின்போது உயிரிழக்கும் தியாகிகளுக்கான இழப்பீட்டு தொகையை 20 லட்சம் ரூபாயிலிருந்து 30 லட்சம் ரூபாயாக உயர்த்தினார். இந்த தொகை ௫௦ லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். இத்தியாகிகளின் நலனை பாதுகாக்க அரசு செயல்படும். காடுகளை பாதுகாத்தால், அரசு உங்களை பாதுகாக்கும்.மாநிலத்தில் 9.88 லட்சத்துக்கும் அதிகமான ஏக்கர் தரிசு நிலங்கள் உள்ளன. காடுகள் வளர்ப்பதன் மூலம் வனப்பரப்பை அதிகரிக்கலாம். பல மலைகள் உள்ளன. அங்கு உள்ளூர் செடிகளை வளர்ப்பதன் மூலம் மேம்படுத்தலாம்.பசுமை நிறைந்த ஜாம்ஷெட்பூரில், டாடா நிறுவனத்தின் இரும்பு தாது சுரங்கங்கள் உள்ளன. சுரங்கங்கள் இருக்கும் பகுதியில் செய்யலாம் என்றால் மலைப்பகுதியில் செய்ய முடியாதா? விருப்பம் இருந்தால் வனப்பரப்பை அதிகப்படுத்துவோம். தேசத்திற்கு இதை விட பெரிய பங்களிப்பு எதுவும் இல்லை.காடு என்பது இயற்கையின் ஒரு பகுதி மட்டுமல்ல, நம் வாழ்வின் ஒரு பகுதியும் கூட. வனத்துக்கும், நாகரிகத்துக்கும் தொடர்பில்லை என்பது போல் நடந்து கொள்கிறோம்.காட்டின் மூலம் மழை, பயிர், உணவு மற்றும் சுத்தமான காற்றை தருகிறது. காடுகள் இல்லாத நாடு பாலைவனம். நம் நாட்டில் காடுகள் இருப்பதும், அவற்றை வளர்க்க வாய்ப்பு இருப்பதும் நமக்கு கிடைத்த ஆசீர்வாதம்.மேற்கு தொடர்ச்சி மலைகள் இல்லாமல், கர்நாடகா மற்றும் பிற தென் மாநிலங்களை கற்பனை செய்து பார்க்க முடியாது. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நதிகளில் பெரும்பாலானவை வங்காள விரிகுடாவில் கலக்கின்றன. மாநிலம் முழுதும் நீர் ஆதாரங்கள் உள்ளன. காடுகள் பாதுகாப்பு அவசியம். நம் வாழ்க்கை முறையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதை சரி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X