சீக்ரெட் சிங்காரம்

Added : செப் 12, 2022 | |
Advertisement
புது கூட்டணி!அதிர்ஷ்டத்தில் ரெண்டு முறை முதல்வரானவரு அடுத்த வருஷம் நடக்க போற தேர்தலுக்கு என்ன திட்டம் வச்சிருக்காருன்னு யாருக்குமே தெரியல; அவங்க கட்சிக்காரங்களே குழம்பி போய்த்தான் இருக்காங்க. இந்த நேரத்துல அவரு பக்கத்துல இருக்கற தெலுங்கானா முதல்வரை சந்திக்க போறாராம். தேசிய அளவில் மூன்றாவது அணி அமைப்பதற்காத்தான் இந்த சந்திப்புன்னு கூறப்படுது. ஏற்கனவே இவரு



புது கூட்டணி!

அதிர்ஷ்டத்தில் ரெண்டு முறை முதல்வரானவரு அடுத்த வருஷம் நடக்க போற தேர்தலுக்கு என்ன திட்டம் வச்சிருக்காருன்னு யாருக்குமே தெரியல; அவங்க கட்சிக்காரங்களே குழம்பி போய்த்தான் இருக்காங்க. இந்த நேரத்துல அவரு பக்கத்துல இருக்கற தெலுங்கானா முதல்வரை சந்திக்க போறாராம். தேசிய அளவில் மூன்றாவது அணி அமைப்பதற்காத்தான் இந்த சந்திப்புன்னு கூறப்படுது. ஏற்கனவே இவரு 'அக்கட' தேசத்தின் முன்னாள் முதல்வருடன் சேர்ந்து மூன்றாவது அணி அமைச்சாங்க.அது ஊத்திக்கிச்சு. இப்போது தெலுங்கு பேசும் மாநிலத்தின் முதல்வரோட கைகோர்த்து இருக்காங்க. இதுவாவது கைகொடுக்குமான்னு எதிர்பார்க்கிறாங்க.சந்திப்பு ஏன்?பொதுவாக ஒரு டில்லி தலைவரோ அல்லது சென்ட்ரல் மினிஸ்டரோ வரும்போது அக்கட்சி தலைவர்கள் சந்திப்பது வழக்கம்தான். ஆனா எதிர்க்கட்சியை சேர்ந்தவங்க சந்திக்கறது அபூர்வம்.அப்படித்தான் மத்தில இருக்கற முக்கியமான மினிஸ்டரு ஒருத்தரு, தலைநகருக்கு வந்து பல திட்டங்களை துவக்கி வச்சாங்க. இவரை கை கட்சியின் மாநில தலைவரு, சந்திச்சி இருக்காரு. அப்போ அவரு சேதம் அடைஞ்சி இருக்கற சாலைகளை எல்லாம் சீரமைக்கனும்னு கோரிக்கை வச்சாராம்.ஆனாலும் அவரு சந்திச்சதன் பின்னணி குறித்து வழக்கம் போல 'கண்ணும் காதும்' வச்சி பேச ஆரம்பிச்சி இருக்காங்க.புது தந்திரம்!தேசிய அளவிலான எதிர்க்கட்சிக்காரங்க, மழை சேதத்தை வச்சி ஆளுங்கட்சிக்கு எதிரா பிரசாரத்தை முடுக்கி விட முடிவு பண்ணி இருக்காங்க. மேலிடத்தில் இருந்து கூட இது சம்பந்தமா ஒரு உத்தரவு வந்திருக்காம்.எதிர்கட்சிக்காரங்க, இந்த விஷயத்தை கெட்டியாக புடிச்சிட்டாங்க. ஜனங்க தவிச்சிட்டு இருக்கறப்போது ஆளுங்கட்சி அமைச்சர்கங்க எல்லாம் என்ன பண்ணிட்டு இருந்தாங்க; போட்டோக்களை போட்டு சமூக வலைதளத்துல பரப்பிட்டு வராங்க.ஒருத்தரு தோசை சாப்பிட்டாரு; இன்னொருத்தரு துாங்கி வழிஞ்சாருன்னு போட்டோக்களை போட்டு கிண்டல் பண்ணி இருக்காங்க. இதுக்கு பதிலடியாக எதிர்க்கட்சிக்காரங்க என்ன பண்ணாங்கன்னு ஜனங்களுக்கு தெரிவிக்க, போட்டோக்களை கமலக்கட்சிக்காரங்க ரெடி பண்ணிட்டு இருக்காங்க.தவிக்கிறாங்க அம்மணி!காவிரி பாயும் மாவட்டத்தின் சுயேச்சை எம்.பி.,யா இருக்கற பெண்மணி இவங்க. சினிமா பின்புலம் இருந்ததால ஈசியா ஜெயிச்சாங்க. அடுத்த தேர்தல்ல ஜெயிக்க இந்த பின்புலம் போதாது அப்படீங்கறதால, தாமரையை கை பிடிக்க நினைச்சி இருக்காங்க.இந்த நேரத்துல தாமரை கட்சியின் சிங்கத்தின் பெயர் கொண்ட இளம் எம்.பி.,யுடன் மோதல் ஏற்பட்டிருக்கு. இது கட்சில சேர தடையா இருக்கும்னு நெனக்கிறாங்க. இதுக்கு முன்னாடி அந்த மாவட்டத்தை சேர்ந்த மாநில கட்சிக்காரங்க கூட மோதல் போக்கு இருந்தப்போ கூட அவரு பெரிசா எடுத்துக்கல.ஆனா இப்போது சிங்கத்தின் பெயர கொண்டவருடான மோதலால் அதிருப்தி அடைஞ்சி இருக்காறாம்.சமாதான போக்குல போலாம்னாலும், எதுவும் சரிப்பட்டு வரலியாம். இதனால பிரதமரு தலையிட்டு தீர்க்கனும்னு அந்த பெண்மணி கோரிக்கை வச்சி இருக்காங்க.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X