கடலில் குளித்த மாணவர் மாயம்

Added : செப் 12, 2022 | |
Advertisement
பாகூர்-விழுப்புரம் மாவட்டம், பாக்கம் கூட்ரோடு அடுத்துள்ள கோண்டூர் குளத்துமேட்டு வீதியை சேர்ந்தவர் ரமேஷ்; கூலித் தொழிலாளி. இவரது மகன் சபரிநாதன், 18. இவர் கடலுாரில் உள்ள அரசு கல்லுாரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சபரிநாதன், நேற்று தனது நண்பர்களுடன் கிருமாம்பாக்கம் அடுத்துள்ள நரம்பை கடலில் குளித்தார்.அப்போது, ராட்சத அலையில் சிக்கிய



பாகூர்-விழுப்புரம் மாவட்டம், பாக்கம் கூட்ரோடு அடுத்துள்ள கோண்டூர் குளத்துமேட்டு வீதியை சேர்ந்தவர் ரமேஷ்; கூலித் தொழிலாளி. இவரது மகன் சபரிநாதன், 18. இவர் கடலுாரில் உள்ள அரசு கல்லுாரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சபரிநாதன், நேற்று தனது நண்பர்களுடன் கிருமாம்பாக்கம் அடுத்துள்ள நரம்பை கடலில் குளித்தார்.அப்போது, ராட்சத அலையில் சிக்கிய சபரிநாதன் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. தகவலறிந்த கிருமாம்பாக்கம் போலீசார், மீனவர்கள் உதவியுடன் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சபரிநாதனின் அக்கா அர்ச்சனா அளித்த புகாரின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் விஜயக்குமார், ஏட்டு ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழக்கு பதிந்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X