சூப் வாளியில் விழுந்த குழந்தை பலி

Added : செப் 12, 2022 | |
Advertisement
புதுச்சேரி-வாளியில் சூடாக ஊற்றி வைத்திருந்த காளான் 'சூப்'பில் விழுந்து இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது.புதுச்சேரி, ஆலங்குப்பம், அன்னை நகரை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி,37; இவர், செங்கல்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது மனைவி நிஷா. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். நிஷா, வீட்டில் காளான் சூப் தயாரித்து விற்கிறார். நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு



புதுச்சேரி-வாளியில் சூடாக ஊற்றி வைத்திருந்த காளான் 'சூப்'பில் விழுந்து இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது.புதுச்சேரி, ஆலங்குப்பம், அன்னை நகரை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி,37; இவர், செங்கல்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது மனைவி நிஷா. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். நிஷா, வீட்டில் காளான் சூப் தயாரித்து விற்கிறார். நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு வீட்டில் காளான் சூப் தயாரித்து, 2 அரை அடி உயரமுள்ள வாளியில் ஊற்றி வைத்திருந்தார்.பின், அவர் வழக்கமான பணிகளை செய்து கொண்டிருந்தார். அப்போது, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த அவரது 2 வயது பெண் குழந்தை ஆஷிகா, காளான் சூப் வாளியில் தவறி விழுந்தது. இது தெரியாமல் குழந்தையை காணவில்லை என நிஷா தேடியுள்ளார்.இரவு 7.15 மணிக்கு, காளான் சூப் வாளியில் குழந்தை விழுந்து கிடந்தது தெரிய வந்தது. உடனடியாக குழந்தையை மீட்டு ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர், குழந்தை இறந்து விட்டதாக கூறினார். டி.நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X