நெல் அறுவடை இயந்திர கட்டணம் உயர்வு; வேறு வழியில்லாமல் விவசாயிகள் தவிப்பு| Dinamalar

நெல் அறுவடை இயந்திர கட்டணம் உயர்வு; வேறு வழியில்லாமல் விவசாயிகள் தவிப்பு

Added : செப் 12, 2022 | |
திருவள்ளூர் மாவட்டம் முழுதும் சொர்ணவாரி பருவத்திற்கு, 62,500 ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்பட்டு, தற்போது அறுவடை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அறுவடை பணிகளுக்கு முற்றிலும் இயந்திரங்கள் மட்டுமே பயன்படுத்துப்படுகிறது.அறுவடை இயந்திரங்களால் ஒரு மணி நேரத்தில், ஒரு ஏக்கர் அறுவடை செய்து, அவற்றை உடனடியாக விற்பனை அனுப்ப முடியும் என்பதால், விவசாயிகளுக்கு இது
நெல் அறுவடை இயந்திர கட்டணம் உயர்வு;  வேறு வழியில்லாமல் விவசாயிகள் தவிப்புதிருவள்ளூர் மாவட்டம் முழுதும் சொர்ணவாரி பருவத்திற்கு, 62,500 ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்பட்டு, தற்போது அறுவடை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அறுவடை பணிகளுக்கு முற்றிலும் இயந்திரங்கள் மட்டுமே பயன்படுத்துப்படுகிறது.அறுவடை இயந்திரங்களால் ஒரு மணி நேரத்தில், ஒரு ஏக்கர் அறுவடை செய்து, அவற்றை உடனடியாக விற்பனை அனுப்ப முடியும் என்பதால், விவசாயிகளுக்கு இது பயனுள்தாக இருக்கிறது.தற்போது, மீஞ்சூர், பொன்னேரி, சோழவரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், அறுவடை பணிகளில், 200க்கும் அதிகமான இயந்திரங்கள் 'பிசி'யாக உள்ளன.ஒரு மணி நேரத்திற்கு, 2,300- - 2,500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது கடந்த ஆண்டை விட, 300- - 500 ரூபாய் வரை அதிகமாகும்.ஒரு மணி நேரத்தில், ஒரு ஏக்கர் அறுவடை செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு, 10 - 12 ஏக்கர் வரை அறுவடை செய்துவிட முடியும் என்பதால், விவசாயிகளும் அறுவடை இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர்.அவ்வப்போது பெய்து வரும் மழையால், நெல் மணிகள் பாதித்து விடக் கூடாது என்பதால், விவசாயிகள் வேறு வழியின்றி, அறுவடை இயந்திர உரிமையாளர்கள் நிர்ணயிக்கும் கட்டணத்தை செலுத்தி பணிகளை துரிதமாக முடித்து வருகின்றனர்.அறுவடை இயந்திர கட்டணம் ஆண்டுதோறும் உயர்வதால், கிராமங்களில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக அவற்றை வாங்கி விவசாயிகளுக்கு குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு விட வேண்டும்.அறுவடை இயந்திரங்கள் வாயிலாக கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும், கூடுதல் வருவாய் கிடைக்கும் என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.இது குறித்து வேளாண் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:தற்போது மாவட்டத்தில், அயநெல்லுார், பெரியபாளையம், கிளாம்பாக்கம் ஆகிய இடங்களில் கூட்டுறவுத் துறை வாயிலாக, மூன்று அறுவடை இயந்திரங்கள் விவசாயிகளுக்கு வாடகை விடப்படுகிறது.அங்கு, ஒரு மணி நேரத்திற்கு கட்டணமாக, 2,200 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.மேலும், நான்கு இடங்களில் அறுவடை இயந்திரங்கள் வர உள்ளன. விவசாயிகளுக்கு உதவும் வகையில் அனைத்து பகுதிகளிலும், அறுவடை இயந்திரங்களை வழங்குவது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்இது குறித்து அறுவடை இயந்திர உரிமையாளர்கள் தெரிவித்ததாவது:அறுவடை இயந்திரங்களை ஓரிடத்தில் இருந்து, மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்வதற்கு தனி வாகனம், அதற்கு டிரைவர் ஓட்டுனர், ஆப்பரேட்டர் சம்பளம் உள்ளிட்ட செலவினங்கள் உள்ளன.இது தவிர்த்து, ஒரு மணி நேரத்திற்கு, 10- - 12 லிட்டர் டீசல் தேவை. உதிரி பாகங்கள் மாற்றுதல், வாகனங்கள் பராமரிப்பு என, அறுவடை பணியின்போது ஏற்படும் செலவினங்களை கணக்கிட்டு இந்த விலையை உயர்த்தி உள்ளோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.- நமது நிருபர்-


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X