சர்வதேச சுற்றுலா பகுதியில் சுகாதாரம்...கேள்விக்குறி! மாமல்லை பேரூராட்சி தயங்குவது ஏன்?| Dinamalar

சர்வதேச சுற்றுலா பகுதியில் சுகாதாரம்...கேள்விக்குறி! மாமல்லை பேரூராட்சி தயங்குவது ஏன்?

Added : செப் 12, 2022 | |
மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில், பெருகும் பன்றிகளால், சுகாதார சீர்கேடும், நோய் தொற்று பரவும் அபாயமும் நிலவுகிறது. இதனால் இங்கு வரும் சுற்றுலாப் பயணியர் அச்சப்படுகின்றனர்.மாமல்லபுரம், சர்வதேச பாரம்பரிய நினைவுச் சின்ன இடமாக விளங்குகிறது. கி.பி.,7 - 8ம் நுாற்றாண்டு, பல்லவர் கால கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ச்சுனன் தபசு, பிற குடவரைகள் என, இங்கு அமைந்துள்ளன.யுனெஸ்கோ கலாசார
சர்வதேச சுற்றுலா பகுதியில் சுகாதாரம்...கேள்விக்குறி!  மாமல்லை பேரூராட்சி தயங்குவது ஏன்?


மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில், பெருகும் பன்றிகளால், சுகாதார சீர்கேடும், நோய் தொற்று பரவும் அபாயமும் நிலவுகிறது. இதனால் இங்கு வரும் சுற்றுலாப் பயணியர் அச்சப்படுகின்றனர்.மாமல்லபுரம், சர்வதேச பாரம்பரிய நினைவுச் சின்ன இடமாக விளங்குகிறது.கி.பி.,7 - 8ம் நுாற்றாண்டு, பல்லவர் கால கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ச்சுனன் தபசு, பிற குடவரைகள் என, இங்கு அமைந்துள்ளன.யுனெஸ்கோ கலாசார பிரிவு, இவற்றை சர்வதேச பாரம்பரிய நினைவுச் சின்னமாக அங்கீகரித்துள்ளது. உள்நாடு, சர்வதேச பயணியர், கண்டு ரசிக்கின்றனர்.மத்திய, மாநில அரசுகள், சுற்றுலா மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தி, பயணியர் அதிகரிக்கின்றனர். பிரதமர் மோடி - சீன அதிபர் ஜீ ஜின்பிங், 2019ல், இங்கு முறைசாரா மாநாடாக சந்தித்த நிலையில், சர்வதேச பயணியர் அதிகரிக்கின்றனர். 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியும், இங்கு கடந்த மாதம் நடத்தப்பட்டது. இத்தகைய சிறப்புள்ள பகுதியில், சுற்றுச்சூழல் பாதுகாப்பும், துாய்மை சுகாதாரமும் அவசியம்.இதற்கு மாறாக, பேரூராட்சி நிர்வாக மெத்தனத்தால், சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது.குறிப்பாக, பன்றிகள் பெருகி, சீர்கேடுகள் அதிகரிக்கிறது. இப்பகுதி காட்டுநாயக்கர் பலர், இறைச்சி தேவைக்காக, பன்றிகள் வளர்க்கின்றனர். சுற்றுச்சூழல், சுகாதாரம் பாதிக்கப்படாத வகையில், வசிப்பிடத்திற்கு அப்பால் தொலைவு பகுதியில், இவற்றை வளர்க்க வேண்டும்.இங்கு வளர்ப்போர், இவ்வூர் சுற்றுலா சிறப்பையே அலட்சியப்படுத்தி, அவற்றை திறந்தவெளியில் விடுகின்றனர்.பொதுமக்கள் வசிப்பிடம், கலைச்சின்ன பகுதிகளில், பெரும் கூட்டமாக அவை திரிகின்றன. குப்பையை கிளறுகின்றன. சேற்றில் புரண்டு, கடும் துர்நாற்றத்துடன் உள்ளன.வசிப்பிடங்களிலும், சிற்ப பகுதிகளிலும், குப்பையில் புரண்ட துர்நாற்றத்துடன், சாலைகளில் உலவுகின்றன.அவற்றை கண்டு, பொதுமக்கள் பயணியர், முக சுளிப்புடன் அருவருக்கின்றனர்.'டெங்கு', பன்றி காய்ச்சல் என நோய்கள் ஏற்பட்டு பாதிக்கப்படுவோமோ என, அச்சப்படுகின்றனர். போக்குவரத்து சாலையின் குறுக்கில், அடிக்கடி கடந்து, விபத்தும் அதிகரிக்கிறது.சர்வதேச நிகழ்வின்போது மட்டுமே, அவற்றை பிடிக்க, பேரூராட்சி நிர்வாகம் முயற்சிக்கிறது. அதன்பின் நடவடிக்கையே இன்றி, அலட்சியப்படுத்துகிறது.பொதுவெளியில், பன்றிகளை விடுவோர் மீது, 1920ம் ஆண்டு நகராட்சிகள் சட்டம், 241ம் பிரிவின்கீழ், நிர்வாகம் நடவடிக்கை எடுக்கலாம்.ஆனாலும் தயங்குகிறது.நிர்வாக நடவடிக்கை புறக்கணிப்பு, பன்றி வளர்ப்போருக்கு சாதகமாகி, பன்றிகள் பெருகி உலவுகின்றன. பன்றி வளர்ப்போர், பேரூராட்சி நிர்வாகத்தை மிரட்டுவதாக கூறப்படுவதால், நடவடிக்கை எடுக்க, நிர்வாகம் தயங்குகிறது.இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது:மாமல்லபுரம், சுற்றுலாப் பகுதியாக உள்ளது. பன்றி வளர்க்க, அனுமதிக்கவே கூடாது. ஆனால், பன்றி வளர்ப்பதுடன், பொது இடத்திலும் திரிய விடுகின்றனர். இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. அவற்றை அப்புறப்படுத்தவும், இங்கு வளர்ப்பதற்கு தடைவிதிக்கவும், பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X