மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தலில் கெடுபிடி தேவை | Dinamalar

மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தலில் கெடுபிடி தேவை

Added : செப் 12, 2022 | |
செம்பட்டி : மோட்டார் வாகன சட்ட விதிகளை முழுமையாக அமல்படுத்துவதில் உள்ள அலட்சியத்தால், வாகன விபத்துக்கள் உயிர் பலி எண்ணிக்கை சமீபகாலமாக மீண்டும் அதிகரிக்க துவங்கி உள்ளது. வாகன எண்ணிக்கை அதிகரிப்பு, போக்குவரத்து நெரிசல் போன்றவை மட்டுமின்றி, நான்கு வழி சாலைகளில் எதிர் திசை பயணம் , சீட் பெல்ட், இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாதிருத்தல் போன்ற சாலை விதி மீறுதலால்
 மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தலில் கெடுபிடி தேவைசெம்பட்டி : மோட்டார் வாகன சட்ட விதிகளை முழுமையாக அமல்படுத்துவதில் உள்ள அலட்சியத்தால், வாகன விபத்துக்கள் உயிர் பலி எண்ணிக்கை சமீபகாலமாக மீண்டும் அதிகரிக்க துவங்கி உள்ளது. வாகன எண்ணிக்கை அதிகரிப்பு, போக்குவரத்து நெரிசல் போன்றவை மட்டுமின்றி, நான்கு வழி சாலைகளில் எதிர் திசை பயணம் , சீட் பெல்ட், இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாதிருத்தல் போன்ற சாலை விதி மீறுதலால் பாதிப்புகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி, ஒட்டன்சத்திரம், கன்னிவாடி, நத்தம், வடமதுரை, வேடசந்துார் உள்ளிட்ட இடங்களில், சமீபத்திய நாட்களில் அரங்கேறிய விபத்துக்கள் கோர பதிவுகளை ஏற்படுத்தியுள்ளன. இவற்றின் மூல காரணமாக சாலை விதி மீறல்கள் இருப்பதை மறுக்க முடியாது. ஹெல்மெட், சீட் பெல்ட் பிரச்னை போன்று, தனியார் பஸ்களின் அசுர வேகம், அரசு பஸ்களின் பராமரிப்பற்ற உதிரி பாகங்களும் விபத்து காரண பட்டியலில் முக்கிய இடம் பெறுகின்றன.நான்கு வழிச்சாலைகளில் சேதமடைந்த ரோடு, ஆழமான குழிகள், விபத்து அபாயத்தில் மேம்பாலங்களில் நீட்டிக்கொண்டிருக்கும் இரும்பு தடுப்புகள், போதிய அறிவிப்பு பலகை இல்லாத குறுகிய திருப்பங்கள் என நெடுஞ்சாலை துறையின் அலட்சிய காரணங்களும் இப்பட்டியலில் உள்ளன.வாகனங்களை கண்காணிக்க வேண்டிய போலீசார், பெயரளவில் இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் மட்டுமே கடுமை காட்டுகின்றனர். சிபாரிசு, கவனிப்பு போன்றவற்றால் விதிமீறல்களை கண்டுகொள்வதில்லை. வெறுமனே நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையில் வழக்கு பதிவு செய்வது, வசூல் ஆகியவற்றுடன் கண்டுகொள்ளாமல் விடுவதே இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. போலீஸ் பற்றாக்குறை, பணிச்சுமை போன்ற காரணங்களை கூறி இப்பணியில் தொய்வு ஏற்படுத்துகின்றனர். சமூக விரோத செயல்கள் மட்டுமின்றி உயிர் பலி அரங்கேற்றும் கோர விபத்துகளும் வாடிக்கையாகி வருகிறது.வேக கட்டுப்பாட்டு கருவி அவசியம்

போலீஸ் அலட்சியத்தால் அனைத்து மாவட்ட எல்லைகள், 4 வழிச்சாலையில் ரோந்து, வாகன தணிக்கை என போலீசார் நியமித்தபோதும், உரிமம் இல்லாத நபர்கள் இருசக்கர வாகனம், ஆட்டோ, கார், சரக்கு வாகனங்களை இயக்குவது வழக்கமாகிவிட்டது. தனியார் பஸ்கள் வருவாய் நோக்கில், நகர் பகுதிகளில் மெதுவாகவும், நேரத்தை ஈடு செய்ய பிற இடங்களில் அதிவேக பயணத்தையும் மேற்கொள்கின்றன. தனியார் பஸ்களின் அசுரவேக பயணத்தை தடுக்கும் வகையில் அனைத்து பொது போக்குவரத்து வாகனங்களிலும் வேகக்கட்டுப்பாட்டு கருவிகள் நிறுவப்பட்டிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அன்பழகன்,ஆன்லைன் சேவை மைய உரிமையாளர், செம்பட்டிபுதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X