அரசு பஸ்சை மீண்டும் இயக்க மாணவர்கள் கோரிக்கை

Added : செப் 12, 2022 | |
Advertisement
நடுவீரப்பட்டு,-நடுவீரப்பட்டு-விலங்கல்பட்டு சாலை விரிவாக்க பணியால் நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நடுவீரப்பட்டிலிருந்து விலங்கல்பட்டு செல்லும் வழியில் வாண்டராசன்குப்பம், வன்னியர்புரம், ராணிப்பேட்டை, அணைக்கட்டு புதுப்பாளையம், நடுவீரப்பட்டு காலனி, மூலக்குப்பம் ஆகிய பகுதிகள் உள்ளன.இந்த சாலை விரிவாக்கப் பணியால் இந்த வழியாக



நடுவீரப்பட்டு,-நடுவீரப்பட்டு-விலங்கல்பட்டு சாலை விரிவாக்க பணியால் நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நடுவீரப்பட்டிலிருந்து விலங்கல்பட்டு செல்லும் வழியில் வாண்டராசன்குப்பம், வன்னியர்புரம், ராணிப்பேட்டை, அணைக்கட்டு புதுப்பாளையம், நடுவீரப்பட்டு காலனி, மூலக்குப்பம் ஆகிய பகுதிகள் உள்ளன.இந்த சாலை விரிவாக்கப் பணியால் இந்த வழியாக இயக்கப்பட்டு வந்த அரசு பஸ் நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதி மாணவர்கள், பொது மக்கள் நடுவீரப்பட்டுக்கு வந்து பஸ் ஏறி கடலுார், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர். இதனால் மாணவர்கள் சரியான நேரத்திற்கு பள்ளி, கல்லுாரி செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.தற்போது சாலை விரிவாக்கப் பணிகள் முடிந்து, தார் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இச்சாலையில் பஸ்சை தவிர மற்ற வாகனங்கள் அனைத்தும் செல்கின்றன.எனவே, இச்சாலை வழியாக நடுவீரப்பட்டில் இருந்து விலங்கல்பட்டுக்கு மீண்டும் அரசு பஸ்சை இயக்க வேண்டும் என, மாணவர்கள், பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X