பல்கலை அனுமதி சீட்டில் மோடி, தோனி புகைப்படம்

Added : செப் 12, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
பாட்னா : பீஹாரில் ஒரு பல்கலையில், பி.ஏ., தேர்வு எழுதுவதற்காக வழங்கப்பட்ட அனுமதி சீட்டில், பிரதமர் நரேந்திர மோடி, கவர்னர் பிகு சவுகான், கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் புகைப்படங்கள் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி அரசு அமைந்துள்ளது. தர்பங்காவை தலைமையிடமாக வைத்து
PM Modi, MS Dhoni, Bihar University, Admit Cards, Photos

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பாட்னா : பீஹாரில் ஒரு பல்கலையில், பி.ஏ., தேர்வு எழுதுவதற்காக வழங்கப்பட்ட அனுமதி சீட்டில், பிரதமர் நரேந்திர மோடி, கவர்னர் பிகு சவுகான், கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் புகைப்படங்கள் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி அரசு அமைந்துள்ளது. தர்பங்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும் லலித் நாராயண் மிதிலா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில், பி.ஏ., தேர்வு எழுதுவதற்கான அனுமதி சீட்டுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.

இதில் பிரதமர் நரேந்திர மோடி, மாநில கவர்னர் பிகு சவுகான், கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் படங்களுடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


latest tamil newsஇது குறித்து பல்கலை உயரதிகாரிகள் கூறியுள்ளதாவது: தேர்வு எழுதும் மாணவர்கள் 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்பட்டது. தங்களுடைய சுய விபரங்களுடன், புகைப்படத்தையும் மாணவர்களே அதில் இணைக்கும்படி கூறப்பட்டிருந்தது. சில விஷமக்கார மாணவர்கள், பிரதமர் உள்ளிட்டோரின் புகைப்படத்தை இணைத்துள்ளனர். இது தொடர்பாக அந்த மாணவர்களிடம் விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S Ramkumar - Tiruvarur,இந்தியா
12-செப்-202210:43:53 IST Report Abuse
S Ramkumar அப்பா அதி புத்தி சாலிகளா. இது ஒருசில கேலி கூத்து நடத்தும் மாணவர்களினால் திடடமிட்டு செய்யப்படும் கூத்து. புகைப்படத்தை அவர்களே அப்லாட் செய்ய சொன்னதற்கு இவர்கள் மோடி, டோனி படத்தை உள்ளியிடு செய்தால் பல்கலை கலக்கம் என்ன செய்யும். ஒரு ஒரு சீட்டையும் வெளியிடுவதற்கு முன்னாள் எவ்வாறு சரி பார்க்க முடியும். சரி இப்ப மோடி படம் போட்டானுங்க. நாளைக்கு குல்ஸாரிலால் நந்தா படத்தை உள்ளீடு செய்தால் யாருக்காவது தெரியவா போகிறது. பரீட்சை ஹாலில் பரிசோதனை செய்தால் தான் தெரியும்.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
12-செப்-202210:05:17 IST Report Abuse
Sampath Kumar உ.பி இங்கே தான் அணைத்து லொள்ளுகளும் நடக்கும்
Rate this:
Neutrallite - Singapore,சிங்கப்பூர்
12-செப்-202210:50:40 IST Report Abuse
Neutralliteஓ...படிக்காம தான் இவ்ளோ நாள் கமெண்ட் போடுறியா...இது பீகார்...சில சமயம் சம்மந்தா சம்மந்தம் இல்லாம இருக்குற அப்போவே நெனச்சேன்......
Rate this:
Cheran Perumal - Radhapuram,இந்தியா
12-செப்-202215:20:45 IST Report Abuse
Cheran Perumalமுரசொலி வாசகர்....
Rate this:
Cheran Perumal - Radhapuram,இந்தியா
12-செப்-202215:21:50 IST Report Abuse
Cheran Perumalஉண்மை தெரிவதற்குள் இங்குள்ள மீடியாக்கள் அதை ஊதி பெரிதாக்கி தண்டனையும் வழங்கியிருப்பார்களே?...
Rate this:
Cancel
visu - tamilnadu,இந்தியா
12-செப்-202208:17:18 IST Report Abuse
visu சுலபம் அந்த அனுமதி சீட்டில் உள்ள புகைப்படமும் தேர்வு எழுத வந்தவர் படமும் பொருந்தவில்லை என்று தேர்வு எழுத அனுமதிக்காதீர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X