புதுடில்லி ஆம் ஆத்மி அரசு மீதான ஊழல் புகார் தொடர்கிறது! பஸ்கள் வாங்கியதிலும் அரங்கேறிய மோசடி

Added : செப் 12, 2022 | |
Advertisement
புதுடில்லி : புதுடில்லியில், ஆளும் ஆம் ஆத்மி அரசு மீதான ஊழல் புகார்கள் தொடர்கின்றன. மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு, 1,000 பஸ்கள் வாங்கியதில் மோசடி நடந்ததாக எழுந்துள்ள புகார் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு துணை நிலை கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.புதுடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு அமைந்துள்ளது. மாநில அரசுக்கும், துணை நிலை கவர்னர்
VK Saxena, Arvind Kejriwal, ஆம் ஆத்மி, சிபிஐ, ஊழல், விகே சக்சேனா, அரவிந்த் கெஜ்ரிவால் , AAP, CBI, Corruption,

புதுடில்லி : புதுடில்லியில், ஆளும் ஆம் ஆத்மி அரசு மீதான ஊழல் புகார்கள் தொடர்கின்றன. மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு, 1,000 பஸ்கள் வாங்கியதில் மோசடி நடந்ததாக எழுந்துள்ள புகார் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு துணை நிலை கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.

புதுடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு அமைந்துள்ளது. மாநில அரசுக்கும், துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது.மதுபான விற்பனை உரிமம் தொடர்பான கொள்கையில், புதுடில்லி அரசு மாற்றம் செய்தது. தனியாருக்கும் உரிமம் வழங்கும் இந்த கொள்கையால், பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு துணை நிலை கவர்னர் உத்தரவிட்டார். அதன்படி, துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் மீது, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதற்கிடையே, பள்ளிகள் கட்டுவதில் மோசடி நடந்தது என, புதுடில்லி அரசுக்கு எதிராக பல புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, துணை நிலை கவர்னருக்கு எதிராக, ஆம் ஆத்மி அரசு பல ஊழல் புகார்களை கூறியது.

டி.டி.சி., எனப்படும், புதுடில்லி போக்குவரத்துக் கழகத்துக்கு, 1,000 பஸ்கள் வாங்கியதில் மோசடி நடந்துள்ளதாக, துணை நிலை கவர்னரிடம் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு அவர் நேற்று உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து, உயரதிகாரிகள் கூறியுள்ளதாவது:

புதுடில்லி போக்குவரத்துக் கழகத்துக்கு, தாழ்தளத்துடன் கூடிய, 1,000 பஸ்கள் வாங்க, 2019 ஜூலையில் ஒப்பந்தம்கோரப்பட்டது. இதில் மோசடி நடந்து உள்ளதாக புகார் எழுந்தது.இதையடுத்து, முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஓ.பி.அகர்வால் தலைமையிலான குழுவின் விசாரணைக்கு, கடந்தாண்டு ஜூனில் உத்தரவிடப்பட்டது. அந்தக் குழு, கடந்தாண்டு ஆகஸ்ட்டில் தன் அறிக்கையை தாக்கல் செய்தது.

பஸ்கள் வாங்கும் ஒப்பந்த நடைமுறையில் மோசடி நடந்துள்ளதாக, அந்த விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் புதிய புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், பஸ்கள் வாங்குவதை இறுதி செய்யும் குழுவின் தலைவராக, மாநில போக்குவரத்து துறை அமைச்சர் நியமிக்கப்பட்டார். ஊழல் செய்யவே இந்த மாற்றம் செய்யப்பட்டதாக, புதிய புகாரில் கூறப்பட்டுள்ளது.

மேலும், பஸ்களை வாங்குவது தொடர்பாக, ஒரு நிறுவனம் ஆலோசனை அமைப்பாக நியமிக்கப்பட்டது. இதுவும், மோசடி செய்வதற்காகவே ஆம் ஆத்மி அரசால் நியமிக்கப்பட்டதாக, புதிய புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்தப் புகார்கள் குறித்து, தலைமைச் செயலரின் கருத்து கேட்டு, ஜூலை 22ல் துணை நிலை கவர்னர் கடிதம் அனுப்பியிருந்தார்.

அதற்கு, ஆக., 19ல் தலைமைச் செயலர் பதில் அனுப்பியுள்ளார். அதில், பஸ்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் மோசடி நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்தே, முந்தைய புகாருடன் இணைத்து இந்தப் புகாரையும் விசாரிக்கும்படி, சி.பி.ஐ.,க்கு துணை நிலை கவர்னர் பரிந்துரைத்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

'பஸ் வாங்கவே இல்லை'

இந்த விவகாரம் தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ., சவுரப் பரத்வாஜ் கூறியுள்ளதாவது:கடந்தாண்டு அளிக்கப்பட்ட புகாரில், சி.பி.ஐ., நடத்திய விசாரணையில் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், தற்போது புதிதாக மற்றொரு புகாரை ஏற்பாடு செய்துள்ளனர்.தன் மீதான ஊழல் புகாரை திசை திருப்ப, துணை நிலை கவர்னர், இந்த நாடகம் ஆடுகிறார். ஏற்கனவே, மூன்று அமைச்சர்கள் மீது குற்றஞ்சாட்டினார். அதில் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. தற்போது, நான்காவது அமைச்சர் மீது அவர் புகார் கூறியுள்ளார்.உண்மையில், புதுடில்லி போக்குவரத்துக் கழகத்துக்கு பஸ்களே வாங்கவில்லை. அந்த ஒப்பந்தம்ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுவிட்டது. இது தெரியாமல், துணை நிலை கவர்னர் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். புதுடில்லிக்கு நன்கு படித்த துணை நிலை கவர்னர் வேண்டும். வேண்டிய இடத்தில் கையெழுத்திடுபவர் தேவையில்லை.இவ்வாறு அவர் கூறினார்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X