ரேஷன் அரிசி மூடைகள் மழையில் வீணாகும்.. அவலம்| Dinamalar

ரேஷன் அரிசி மூடைகள் மழையில் வீணாகும்.. அவலம்

Added : செப் 12, 2022 | |
திருவாடானை, ; ராமநாதபுரம் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் இருந்துமாவட்டம் முழுவதும் அனுப்பப்படும் ரேஷன் அரிசி மழையில் நனைந்து வீணாகும் அபாயம் உள்ளதால் அவற்றை தார்பாயால் மூடி அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 லட்சத்து 25 ஆயிரத்து 186 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு ராம்கோ கூட்டுறவு ரேஷன் கடைகள், நுகர்பொருள் வாணிப கழக
ரேஷன் அரிசி மூடைகள் மழையில் வீணாகும்.. அவலம்


திருவாடானை, ; ராமநாதபுரம் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் இருந்துமாவட்டம் முழுவதும் அனுப்பப்படும் ரேஷன் அரிசி மழையில் நனைந்து வீணாகும் அபாயம் உள்ளதால் அவற்றை தார்பாயால் மூடி அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 லட்சத்து 25 ஆயிரத்து 186 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர்.



இவர்களுக்கு ராம்கோ கூட்டுறவு ரேஷன் கடைகள், நுகர்பொருள் வாணிப கழக ரேஷன் கடைகள் என 650 ரேஷன் கடைகள் உள்ளன. மாதந்தோறும் 4800 டன் ரேஷன் அரிசி ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது.ராமநாதபுரத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் சரக்கு ரயில்களில் கொண்டுவரப்பட்டு இருப்பு வைக்கப்படும் அரிசி, பின் அங்கிருந்து லாரிகளில் மாவட்டம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இவ்வாறு ரேஷன்கடைகளுக்கு லாரியில் ஏற்றி செல்லும் அரிசி மூடைகள் பாதுகாப்பு இல்லாமல் செல்கிறது.அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை லாரியில் ஏற்றி சென்று கடைகளுக்கு வழங்கப்படுகிறது. தார்பாய் போட்டு மூடாமல் பாதுகாப்பின்றி பொருட்கள் ஏற்றி செல்லப்படுவதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சில நாட்களாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் அரிசி மூடைகள் வீணாகும் அபாயம் உள்ளது.ஏற்கனவே ரேஷனில் வழங்கப்படும் அரிசி மஞ்சள் நிறத்தில் புழுத்து போய் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில், பாதுகாப்பு இன்றி கொண்டு செல்லும் மூடைகள் மழையில் நனைந்தால் வீணாகிவிடும். ஆகவே பொருட்களை பாதுகாப்பாக கொண்டு செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X