அரசு மருத்துவமனை முன் நிறுத்தப்படும் வாகனங்களால் பாதிப்பு

Added : செப் 12, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முன்பு தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சின்னசேலம், கச்சிராயபாளையம், சங்கராபுரம், கல்வராயன்மலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த



கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முன்பு தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சின்னசேலம், கச்சிராயபாளையம், சங்கராபுரம், கல்வராயன்மலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நாள்தோறும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.மருத்துவமனையில் நோயாளிகளை பார்ப்பதற்காக இரு சக்கர வாகனங்களில் வரும் உறவினர்கள் மருத்துவமனை வெளியே சாலையோரங்களில் ஆங்காங்கே பல இடங்களில் நிறுத்தி விட்டு செல்கின்றனர்.இதனால் அவ்வழியாக செல்லும் வாகன போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்பட்டது. அத்துடன் அந்த பகுதியில் வாகன நிறுத்துவதை தடுப்பதற்காக கயிறு கட்டி தடுப்பு ஏற்படுத்தி உள்ளனர்.ஆனால் வாகன ஓட்டிகள் அந்த தடுப்பிற்கு மேல் சாலையை அடைத்தபடி வாகனங்களை வரிசையாக நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதற்கு மேலாக தள்ளுவண்டிக்கடைக்காரர்களின் அணிவகுப்பும் இங்கு போக்குவரத்துக்கு இடைஞ்சலை ஏற்படுத்தி வருகிறது.கலெக்டர் அலு வலகம், மார்க்கெட் கமிட்டி, டி.எஸ்.பி., அலுவலகம், அரசு பள்ளிகள் உள்ள முக்கிய சாலை வழியாகத்தான் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிச்செல்லும் வாகனங்களும் செல்ல வேண்டி உள்ளது.இதனால் இந்த சாலையையொட்டி, தாறுமாறாக நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களால் போக்குவரத்து தடை ஏற்படுவதுடன்.மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். அத்துடன் இவ்வழியாக விரைவாக செல்லும் ஆம்புலன்ஸ்கள் செல்வதற்குகூட வழியின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே கச்சிராயபாளையம் சாலை மருத்துவமனை பகுதியில் தடுப்பு ஏற்படுத்தி மேலும் சாலையை அடைத்தபடி நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களை மாற்று இடத்தில் நிறுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X