தொழில் போட்டி தகராறு 4 பேர் மீது வழக்கு

Added : செப் 12, 2022 | |
Advertisement
உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டையில் பெட்டிக்கடை தொழில்போட்டியில் ஏற்பட்ட தகராறில் 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.உளுந்துார்பேட்டை தாலுகா அன்னை தெரசா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முகமதுஜாபர்அலி 47. இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இவரது கடை அருகே கலியமூர்த்தி மகன் வேலு, 42; கடை வைத்துள்ளார். இருவருக்கும் இடையே தொழில்



உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டையில் பெட்டிக்கடை தொழில்போட்டியில் ஏற்பட்ட தகராறில் 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.உளுந்துார்பேட்டை தாலுகா அன்னை தெரசா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முகமதுஜாபர்அலி 47. இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இவரது கடை அருகே கலியமூர்த்தி மகன் வேலு, 42; கடை வைத்துள்ளார். இருவருக்கும் இடையே தொழில் போட்டி ஏற்பட்டு வியாபாரம் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டி இரு தரப்பினரும் ஒருவொருவரை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து முகமதுஜாபர்அலி கொடுத்த புகாரின்பேரில் உளுந்துார்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் அருள்செல்வன் மற்றும் போலீசார் வேலு, அவரது மனைவி ரம்யா,38; இருவர் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.அதேபோல் வேலு மனைவி ரம்யா கொடுத்த புகாரின்பேரில் உளுந்துார்பேட்டை போலீசார் சதாம் உசேன் மனைவி சுமையா 20, முகமது ஜாபர்அலி மகன் ஆகிய இருவர் மீது வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X