மாநில செஸ் போட்டிகள்

Added : செப் 12, 2022 | |
Advertisement
காரியாபட்டி : காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் அருப்புக்கோட்டை, விருதுநகர் சதுரங்க கழகத்தின் சார்பாக, மாநில அளவிலான ஆண்கள், பெண்கள் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவு 5 நாட்கள் செஸ் போட்டிகள் நடந்தன.நவ. 7ல் நடந்த துவக்க விழாவிற்கு நிறுவனர் முகமது ஜலீல் தலைமை வகித்தார். நிர்வாக அதிகாரிகள் சீனி முகைதீன், சீனி முகமது அலியார் முன்னிலை வகித்தனர். உலக அளவிலான


காரியாபட்டி : காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் அருப்புக்கோட்டை, விருதுநகர் சதுரங்க கழகத்தின் சார்பாக, மாநில அளவிலான ஆண்கள், பெண்கள் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவு 5 நாட்கள் செஸ் போட்டிகள் நடந்தன.நவ. 7ல் நடந்த துவக்க விழாவிற்கு நிறுவனர் முகமது ஜலீல் தலைமை வகித்தார். நிர்வாக அதிகாரிகள் சீனி முகைதீன், சீனி முகமது அலியார் முன்னிலை வகித்தனர். உலக அளவிலான சதுரங்க கழகத்தின் முன்னாள் தலைவர் சுந்தர் துவக்கி வைத்தார். 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.ஆண்கள் பிரிவில் மாஸ்டர் அஸ்வந்த், பெண்கள் பிரிவில் தேஜஸ்வினி சாம்பியன் பட்டத்தை பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு கல்லுாரி நிர்வாகிகள் நிலோபர் பாத்திமா, நாசியா பாத்திமா பரிசுகளை வழங்கினார் ஏற்பாடுகளை சதுரங்க கழகத் தலைவர், செயலாளர், உறுப்பினர்கள், பேராசிரியர்கள் அரங்கசாமி, ஷேக் தாவூத், லட்சுமணராஜ் செய்திருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X