சுயஉதவிக் குழு கூட்டமைப்பு கட்டடம் பாதியில் நிறுத்தம்

Added : செப் 12, 2022 | |
Advertisement
திருத்தணி-திருத்தணி ஒன்றியம், செருக்கனுார் கிராமத்தில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், 2017 - 18ம் ஆண்டு, மகளிர் சுய உதவி குழுக்களின் கூட்டமைப்பு கட்டடம் கட்டுவதற்கு, 70.75 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இப்பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு, கடந்தாண்டு ஏப்ரல் மாதம் பணிகள் துவங்கப்பட்டன. ஆறு மாதத்திற்குள் கட்டடம் கட்டி பயன்பாட்டிற்கு விட வேண்டும் என,
சுயஉதவிக் குழு கூட்டமைப்பு கட்டடம் பாதியில் நிறுத்தம்



திருத்தணி-திருத்தணி ஒன்றியம், செருக்கனுார் கிராமத்தில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், 2017 - 18ம் ஆண்டு, மகளிர் சுய உதவி குழுக்களின் கூட்டமைப்பு கட்டடம் கட்டுவதற்கு, 70.75 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இப்பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு, கடந்தாண்டு ஏப்ரல் மாதம் பணிகள் துவங்கப்பட்டன. ஆறு மாதத்திற்குள் கட்டடம் கட்டி பயன்பாட்டிற்கு விட வேண்டும் என, ஒப்பந்ததாரருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், ஒப்பந்ததாரர் பல்வேறு நிர்வாக பிரச்னையால் கட்டடம் கட்டுவதில் காலதாமதம் ஆனது.இந்நிலையில், ஆறு மாதத்திற்கு மேலாக கட்டடப் பணிகள் முழுமையாக நிறுத்தப்பட்டது. இதனால், அரசு பணம் வீணாவதுடன் பணிகள் முடித்து பயன்பாட்டிற்கு விடாததால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.எனவே, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுத்து, பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சுயஉதவி குழு கட்டட பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு விட வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.இது குறித்து திருத்தணி ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ''பாதியில் நிறுத்தப்பட்ட கட்டடப் பணிகள் விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X