கண்மாய்களில் நடக்கும் மீன் வளர்ப்பு, விவசாயத்தால் பாதிப்பு

Added : செப் 12, 2022 | |
Advertisement
காரியாபட்டி : கண்மாயில் நீர் பிடிப்பு பகுதிகளை ஆக்கிரமித்து விவசாயம் செய்வதால் பரப்பளவு குறைந்து நீர் தேக்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதேபோல் மீன் பாசி குத்தகைக்கு எடுத்தவர்களை மீனை பிடிக்க தண்ணீரை வீணாக திறந்து விடுவதால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. கண்மாயில் நீர் தேக்கும் தன்மையை குறைக்கும் இரு காரணிகளை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க



காரியாபட்டி : கண்மாயில் நீர் பிடிப்பு பகுதிகளை ஆக்கிரமித்து விவசாயம் செய்வதால் பரப்பளவு குறைந்து நீர் தேக்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதேபோல் மீன் பாசி குத்தகைக்கு எடுத்தவர்களை மீனை பிடிக்க தண்ணீரை வீணாக திறந்து விடுவதால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. கண்மாயில் நீர் தேக்கும் தன்மையை குறைக்கும் இரு காரணிகளை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் பொதுப்பணித்துறை, ஒன்றியம் சார்பாக கண்மாய்கள் வெட்டப்பட்டு, வரத்து கால்வாய் ஏற்படுத்தி, நீர் நிலைகளில் தண்ணீரைத் தேக்கி, விவசாயத்திற்கு பயன்படுத்துகின்றனர்.பல கண்மாய்கள் வறண்டு காணப்படும் நிலையில் கண்மாய் உள்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து சிலர் விவசாயம் செய்கின்றனர். இதனால் உள் பகுதியின் பரப்பளவு குறைந்து மழை நீரை சேமிக்க முடியாமல் போகிறது. நீர் பிடிப்பு பகுதிகளை சிலர் விற்பனை செய்கின்றனர். இவர்கள் நாளடைவில் கட்டடங்கள் கட்டி ஆக்கிரமிப்பு செய்யவும் வாய்ப்புள்ளது. இதனால் எதிர்காலத்தில் நீர்நிலைகள் காணாமல் போகும் நிலை ஏற்படும்.தமிழகத்தில் 39 ஆயிரத்து 200 கண்மாய்கள் உள்ளன. அதில் 10 சதவீத கண்மாய்கள் காணாமல் போனதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் கண்மாய்கள் மீன் பாசி குத்தகைக்கு விடப்படுகின்றன. நல்ல நீர்வரத்து இருக்கும் நிலையில் மீன் பிடிப்பதற்காக மடையை திறந்து நீரை வீணாக வெளியேற்றுகின்றனர்.

இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் உள்ளது. ஏற்கனவே மீன்பிடி குத்தகைக்கு விடும்போது அரசு அனுமதி பெற வேண்டும் என்கிற உத்தரவு உள்ளது. அதையும் மீறி பெரும்பாலான கிராமங்களில், கிராம கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு நீர் நிலைகளில் உள்ள மீன்களை மறைமுகமாக குத்தகைக்கு விடுகின்றனர். தேவையில்லாமல் தண்ணீரை திறந்து விடுவதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஆகவே மாவட்ட நிர்வாகம் விரைவில் பருவமழை துவங்க உள்ள நிலையில் கண்மாய் உள் ஆக்கிரமிப்புகள், நீர் வெளியேற்றுவதை தடுக்க வேண்டும். மேலும் பொதுவான பிரச்னையான கருவேல மரங்களை அகற்றுவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X