பழநியில் வீடு புகுந்து தாக்குதல் 3 பேர் காயம்; நான்கு பேர் கைது

Added : செப் 12, 2022 | |
Advertisement
சத்திரப்பட்டி : பழநி சத்திரப்பட்டி அருகே காளிப்பட்டியை சேர்ந்தவர் மாசாணி 24. நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டிற்குள் புகுந்த கும்பல், மாசாணி , அவரது தாயார் பலனாத்தாள் 50, மனைவி சந்தியா 22, தம்பி மதன் 22, ஆகியோரை உருட்டு கட்டையால் தாக்கினர். வீட்டில் நின்ற கார், இருசக்கர வாகனத்தை அடித்து உடைத்தனர் வீட்டில் உள்ள பொருட்களையும் சேதப்படுத்தினர். சத்தம் கேட்ட அக்கம்



சத்திரப்பட்டி : பழநி சத்திரப்பட்டி அருகே காளிப்பட்டியை சேர்ந்தவர் மாசாணி 24. நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டிற்குள் புகுந்த கும்பல், மாசாணி , அவரது தாயார் பலனாத்தாள் 50, மனைவி சந்தியா 22, தம்பி மதன் 22, ஆகியோரை உருட்டு கட்டையால் தாக்கினர். வீட்டில் நின்ற கார், இருசக்கர வாகனத்தை அடித்து உடைத்தனர் வீட்டில் உள்ள பொருட்களையும் சேதப்படுத்தினர். சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் மாசாணி குடும்பத்தாரை காப்பாற்றினர். காயமடைந்த பலனாத்தாள், மாசாணி, மதன் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தாக்குதல் நடத்திய அதே பகுதியில் வசிக்கும் மகுடீஸ்வரன் 42, பேச்சியம்மாள் 36, காளிமுத்து 26, கர்ணன் 22 , ஆகியோரை சத்திரப்பட்டி போலீசார் கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X