கொடையில் குவிந்த சுற்றுலா ப்பயணிகள்| Dinamalar

'கொடை'யில் குவிந்த சுற்றுலா ப்பயணிகள்

Added : செப் 12, 2022 | |
கொடைக்கானல் : கொடைக்கானலில் வார விடுமுறையில் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் சில மாதங்களாக தொடர் மழை பெய்து ரம்யமான சூழல் நிலவுகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் அழகை காண பயணிகள் குவிந்து வருகின்றனர். இச்சூழலில் கேரளாவில் ஓணம் பண்டிகை விடுமுறை அடுத்து கேரளா பயணிகள் ஏராளமானவர் மலை நகரில் முகாமிட்டனர். இங்குள்ள
'கொடை'யில் குவிந்த சுற்றுலா ப்பயணிகள்



கொடைக்கானல் : கொடைக்கானலில் வார விடுமுறையில் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் சில மாதங்களாக தொடர் மழை பெய்து ரம்யமான சூழல் நிலவுகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் அழகை காண பயணிகள் குவிந்து வருகின்றனர். இச்சூழலில் கேரளாவில் ஓணம் பண்டிகை விடுமுறை அடுத்து கேரளா பயணிகள் ஏராளமானவர் மலை நகரில் முகாமிட்டனர். இங்குள்ள பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா, கோக்கர்ஸ் வாக், வெள்ளி நீர்வீழ்ச்சி வனச் சுற்றுலா தலங்கள், மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம் உள்ளிட்ட பகுதிகளை கண்டு ரசித்தனர். ஏரியில் படகு சவாரியும், ஏரி சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர். சில வாரங்களாக குறைந்திருந்த சுற்றுலாப்பயணிகளின் வருகை தற்போது அதிகரித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X