இணை கமிஷனர் என ஏமாற்றினார்; மனைவியுடன் கம்பி எண்ணுகிறார்

Added : செப் 12, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
போத்தனுார் : கோவையில் சுங்க இலாகா இணை கமிஷனர் எனக்கூறி பெண்ணை ஏமாற்றியவர் மனைவியுடன் சிக்கினார்.கோவை புறநகர் பகுதியை சேர்ந்த, 37 வயது பெண், கணவரை இழந்து மகனுடன் வசிக்கிறார். இரண்டாம் திருமணம் செய்வதற்காக விவாகரத்து ஆனவர்களுக்கான மேட்ரிமோனியலில் பதிவு செய்தார். இதைப்பார்த்து சின்னதடாகம் அருகே வீரபாண்டியிலுள்ள எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த ராமு, 38, என்பவர் தொடர்புகொண்டு,
போத்தனுார் , மோசடி, திருமணம்,  Fraud, Marriage, Pothanur,

போத்தனுார் : கோவையில் சுங்க இலாகா இணை கமிஷனர் எனக்கூறி பெண்ணை ஏமாற்றியவர் மனைவியுடன் சிக்கினார்.

கோவை புறநகர் பகுதியை சேர்ந்த, 37 வயது பெண், கணவரை இழந்து மகனுடன் வசிக்கிறார். இரண்டாம் திருமணம் செய்வதற்காக விவாகரத்து ஆனவர்களுக்கான மேட்ரிமோனியலில் பதிவு செய்தார். இதைப்பார்த்து சின்னதடாகம் அருகே வீரபாண்டியிலுள்ள எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த ராமு, 38, என்பவர் தொடர்புகொண்டு, தான் விமான நிலைய சுங்க இலாகா பிரிவில் இணை கமிஷனராக பணியாற்றுவதாகவும், லட்சுமி என்பவருடன் திருமணமாகி கருத்து வேறுபாடால் விவாகரத்தாகி விட்டதாகவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து, கடந்த மாதம் அப்பெண் பணிபுரியும் அலுவலகத்துக்கு காக்கி சீருடையில் சென்ற அவர், தனது பெயர் பைடி ராம பிரசாத் எனக்கூறி பேசியுள்ளார். இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்து, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பொருட்கள் வாங்கினர். பின், 25 ஆயிரம் ரூபாய், ராமுவின் வங்கி கணக்கிற்கு அப்பெண் அனுப்பியுள்ளார்.இதையடுத்து ராமு வேலைக்கு செல்லாமல், அப்பெண்ணுடன் தகராறு செய்து பிரிந்தார்.

அதிர்ச்சியடைந்த அப்பெண் விமான நிலைய சுங்க அலுவலகத்தில் விசாரித்ததில், ராமு கூறிய பெயரில் யாரும் அதிகாரியாக இல்லாதது தெரிந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண் குனியமுத்துார் போலீசில் புகார் செய்தார்.வழக்கு பதிந்த போலீசார் ராமு, அவரது மனைவி லட்சுமி ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில், இருவர் மீதும் சென்னை விருகம்பாக்கத்தில் மோசடி வழக்கு இருப்பது தெரிந்தது. மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
14-செப்-202211:06:38 IST Report Abuse
Girija விமான நிலைய கஸ்டம்ஸ் ஊழியர்களுக்கு வெள்ளை யூனிபார்ம், காக்கி இல்லை. இதுபோன்ற விஷயங்களில் தாராளமாக பெண்கள் தாங்களே ரகசியமாக விசாரித்து தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அபப்டி விசாரிப்பதை தெரிந்து திருமணத்தை நிறுத்தினால் ஆள் சரியில்லை என்று தெரியவரும். இந்த அய்யோக்கியர்கள் உபயோகிக்கும் வாகன எண்கள் , விலாசம் போன்றவற்றை உறுதி செய்வதன் மூலம் ப்ராடுகளை எளிதில் கண்டுபிடிக்கலாம்.
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
13-செப்-202204:32:28 IST Report Abuse
NicoleThomson இவனுக்கெல்லாம் எதற்கு மீசை ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X