நில வழிகாட்டி மதிப்பு 200 சதவீதம் உயர்வு?

Updated : செப் 12, 2022 | Added : செப் 12, 2022 | கருத்துகள் (28) | |
Advertisement
சென்னை : நில வழிகாட்டி மதிப்புகளை, 200 சதவீதம் வரை உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளதாக தெரிகிறது. தமிழகத்தில், 2012ல் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு ஒட்டு மொத்தமாக சீரமைக்கப்பட்டது. இதில் காணப்பட்ட குறைபாடுகளை சரி செய்ய, 2017ல் வழிகாட்டி மதிப்பு, 33 சதவீதம் குறைக்கப்பட்டது.இது நடந்து ஐந்து ஆண்டுகளான நிலையில், வழிகாட்டி மதிப்புகளை ஒட்டுமொத்தமாக சீரமைப்பதற்கான பூர்வாங்க
நில வழிகாட்டி மதிப்பு,  200 சதவீதம்,  உயர்வு,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphoneசென்னை : நில வழிகாட்டி மதிப்புகளை, 200 சதவீதம் வரை உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளதாக தெரிகிறது. தமிழகத்தில், 2012ல் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு ஒட்டு மொத்தமாக சீரமைக்கப்பட்டது. இதில் காணப்பட்ட குறைபாடுகளை சரி செய்ய, 2017ல் வழிகாட்டி மதிப்பு, 33 சதவீதம் குறைக்கப்பட்டது.

இது நடந்து ஐந்து ஆண்டுகளான நிலையில், வழிகாட்டி மதிப்புகளை ஒட்டுமொத்தமாக சீரமைப்பதற்கான பூர்வாங்க பணிகளை, பதிவுத் துறை துவக்கியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ கமிட்டி இன்னும் அறிவிக்கப்படவில்லை.அதிகாரம்சார் - பதிவாளர்கள் கூறியதாவது:பதிவுத் துறையில் முறையாக, மாநில, மாவட்ட அளவில் கமிட்டி அமைத்து, வருவாய் துறை ஆலோசனையுடன் வழிகாட்டி மதிப்புகளை உயர்த்துவது வழக்கம்.


latest tamil newsபின், அவ்வப்போது ஏற்படும் தேவை அடிப்படையில், மதிப்புகளை உயர்த்தவும், குறைக்கவும், பதிவுத் துறை டி.ஐ.ஜி.,க்களுக்கு அதிகாரம் உள்ளது.இதை பயன்படுத்தி, மாவட்ட வாரியாக உயர் மதிப்பு பத்திரங்கள் குறித்த தகவல்கள் திரட்டப்படுகின்றன. அதன்படி, உயர் மதிப்பை உறுதி செய்வதற்காக, புதிய வகைப்பாடுகள் ஏற்படுத்தப்படுகின்றன.

பின், அந்தந்த பகுதிக்கு வழிகாட்டி மதிப்பு, 200 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளது.உதாரணமாக, ஒரு கிராமத்தில் ௧ ஏக்கர், 4 லட்சம் ரூபாய் என வழிகாட்டி மதிப்பில் உள்ளது. அந்த பகுதியை சேர்ந்த நில உரிமையாளர், வங்கிக் கடன் பெறும் நோக்கத்தில், 10 லட்சம் ரூபாய்க்கு ௧ ஏக்கர் கைமாறுவதாக பத்திரம் பதிவு செய்து இருப்பார்.

இதை அடிப்படையாக வைத்து, புதிய வகைப்பாட்டை உருவாக்கி, அந்த பகுதியில் அனைத்து சொத்துக்களுக்கும், ஏக்கர், 10 லட்சம் ரூபாயாக வழிகாட்டி மதிப்பு மாற்றப்படுகிறது.விரைவில் அமல்மாவட்ட பதிவாளரிடம்இருந்து இதற்கான பரிந்துரை, டி.ஐ.ஜி.,க்கள் வாயிலாக தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்படுகிறது.

அங்கு நான்கு பேர் குழு, இந்த மதிப்புகளுக்கு இறுதி வடிவம் கொடுத்து, கணினியில் பதிவேற்றம் செய்ய பரிந்துரைக்கிறது.தற்போதைய நிலவரப்படி, ஒரு பதிவு மாவட்டத்துக்கு, 100 இடங்கள் வீதம் வழிகாட்டி மதிப்புகள் உயர்த்தப்படுகின்றன. இந்த மதிப்புகள் விரைவில் அமலுக்கு வரவுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balasubramanian.R - Mayiladuthurai,இந்தியா
13-செப்-202208:14:31 IST Report Abuse
Balasubramanian.R Every year the guidance value should automatically be raised by 3 to 6 percent of previous year value . So that inflation, price rise , income to governments, will be gradual.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
13-செப்-202201:52:02 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் //. உண்மை சந்தை விலைக்கு தானே பதிவு செய்யவேண்டும். நல்ல வேவ் லெங்த் கொஞ்சம் கூட பொருந்த மாட்டேங்குதே.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
12-செப்-202217:57:04 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் வெள்ளை பணத்தில் மட்டுமே வாங்கி விக்கிறவங்களுக்கு இதனால் ஒரு பிரச்சினையும் இல்லை. இங்கே குய்யோ முறையோன்னு கூவுற எல்லா பயபுள்ளைங்களும் கறுப்புப்பணம் வெச்சி இடம் வாங்கி விக்குறவன். அல்லது கருப்புப்பணத்தை ஒளிச்சிட்டேன்னு கூவுறது இன்னொரு பெரிய டூமீல்ன்னு ஒத்துக்குறாங்கன்னு அர்த்தம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X