கழுத்தை நெரித்துமூதாட்டி கொலை

Added : செப் 12, 2022 | |
Advertisement
கோவை : கோவையில் கழுத்தை நெரித்து பெண் கொலை செய்யப்பட்டது குறித்து சிங்காநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.கோவை, சிங்காநல்லுார் அடுத்த வரதராஜபுரத்தை சேர்ந்தவர் மயிலாத்தாள், 65. இவரது கணவர் ராமசாமி சில ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். மகன், 18 ஆண்டுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.உறவினர் ஆதரவின்றி மயிலாத்தாள் பாழடைந்த வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று



கோவை : கோவையில் கழுத்தை நெரித்து பெண் கொலை செய்யப்பட்டது குறித்து சிங்காநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

கோவை, சிங்காநல்லுார் அடுத்த வரதராஜபுரத்தை சேர்ந்தவர் மயிலாத்தாள், 65. இவரது கணவர் ராமசாமி சில ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். மகன், 18 ஆண்டுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.உறவினர் ஆதரவின்றி மயிலாத்தாள் பாழடைந்த வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று காலை அவரது வீட்டுக்கதவு திறந்து கிடந்தது; மயிலாத்தாள் வெளியில் வரவில்லை.
சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இரவு நேரம் வீட்டில் புகுந்த மர்ம நபர், அவரது கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பதை அறிந்த அக்கம் பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.சிங்காநல்லுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீசார் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றினர். போலீஸ் மோப்ப நாய் மற்றும் கை விரல் ரேகை நிபுணர்களின் உதவியுடன் தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
அக்கம் பக்கத்தில் இருக்கும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் சேகரித்து ஆய்வு செய்கின்றனர்.வீட்டில் இருந்த பொருட்கள், பணம், நகை திருடப்பட்டதா, என்ன காரணத்துக்காக கொலை நடந்தது என்று போலீசார் விசாரிக்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X