யானைகள் இறப்பை தடுக்க நடவடிக்கை :தலைமை வனப்பாதுகாவலர் தகவல்

Added : செப் 12, 2022 | |
Advertisement
கோவை : ''ரயில் மோதி யானைகள் இறப்பதை தடுக்க அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது,'' என, கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேவாசிங் கூறினார்.வனங்கள் பாதுகாப்பு, தீத்தடுப்பு, வேட்டைத்தடுப்பு உள்ளிட்ட பணிகளின்போது உயிரிழந்த வனத்துறையினரை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் செப்., 11ம் தேதி வனத்தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.கோவை கவுலி பிரவுன் ரோட்டில்
கோவை, ரயில், யானைகள்,வனத்தியாகிகள் தினம், Coimbatore, Trains, Elephants,



கோவை : ''ரயில் மோதி யானைகள் இறப்பதை தடுக்க அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது,'' என, கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேவாசிங் கூறினார்.

வனங்கள் பாதுகாப்பு, தீத்தடுப்பு, வேட்டைத்தடுப்பு உள்ளிட்ட பணிகளின்போது உயிரிழந்த வனத்துறையினரை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் செப்., 11ம் தேதி வனத்தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.கோவை கவுலி பிரவுன் ரோட்டில் உள்ள வன உயர் பயிற்சியகத்தில், கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேவாசிங் நேற்று வனத்தியாகிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த, 2017 முதல் தமிழக அரசு வனத்தியாகிகள் தினத்தை அனுசரித்து வருகிறது. இந்தாண்டு, நான்கு பேர் வனப்பணியின்போது உயிரிழந்துள்ளனர். வால்பாறையில் தாயால் கைவிடப்பட்ட புலிக்குட்டிக்கு, உணவுக்காக மிருகங்களை வேட்டையாட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சிக்கு கூடுதல் இடம் ஒதுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்க அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.
மாநில வனப்பணிகளுக்கான மத்திய பயிற்சியகம் முதல்வர் திருநாவுக்கரசு, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X