வால்பாறையில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு: எச்சரிக்கையாக இருக்க 'அட்வைஸ்'

Updated : செப் 12, 2022 | Added : செப் 12, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
வால்பாறை: வால்பாறை, எஸ்டேட் பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும், என, வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.தமிழக -- கேரள எல்லையில் அமைந்துள்ள, வால்பாறையில், பருவமழைக்கு பின் வனவளம் பசுமையாக இருப்பதால், மளுக்கப்பாறை, மயிலாடும்பாறை, பன்னிமேடு வழியாக வரும் யானைகள், பல்வேறு எஸ்டேட்களில் தனித்தனி கூட்டமாக

வால்பாறை: வால்பாறை, எஸ்டேட் பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும், என, வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழக -- கேரள எல்லையில் அமைந்துள்ள, வால்பாறையில், பருவமழைக்கு பின் வனவளம் பசுமையாக இருப்பதால், மளுக்கப்பாறை, மயிலாடும்பாறை, பன்னிமேடு வழியாக வரும் யானைகள், பல்வேறு எஸ்டேட்களில் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.
எஸ்டேட் பகுதியில் முகாமிட்ட யானைகள், பகல் நேரத்தில் தண்ணீர் மற்றும் உணவு தேடி ரோட்டை கடக்கின்றன. சில நேரங்களில் தேயிலை காட்டில் முகாமிடுகின்றன.



latest tamil news




வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வால்பாறையில் பருவமழைக்கு பின், யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. பகல் நேரத்திலேயே யானைகள் ரோட்டை கடந்து செல்வதால், வாகன ஓட்டுனர்கள் மிகுந்த கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும். யானைகள் முகாமிட்டுள்ள பகுதியில், எஸ்டேட் நிர்வாகங்கள் தொழிலாளர்களை தேயிலை பறிக்க அனுமதிக்கூடாது.

யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில், இரவு நேரத்தில் மக்கள் தனியாக நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும்.தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் இரவு நேரத்தில் யானைகள் வந்தால், வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் யானைகளை பொதுமக்கள் துன்புறுத்தக்கூடாது.
இவ்வாறு, தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
12-செப்-202210:56:52 IST Report Abuse
JeevaKiran யானைகளின் வழித்தடத்தில் தான் தொழிலாளர் குடியிருப்பு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X