70 ஆண்டுகள் பழமையான விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்| Dinamalar

70 ஆண்டுகள் பழமையான விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

Added : செப் 12, 2022 | கருத்துகள் (1) | |
கோவை : கோவை மாவட்டம் அன்னூர் அருகே கரியா கவுண்டனூரில் 70 ஆண்டுகள் பழமையான செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் இன்று(செப்.,12) நடந்தது. ஒன்றரை கோடி ரூபாயில் திருப்பணி செய்யப்பட்ட இக்கோயிலில் இன்று காலை கொச்சியில் இருந்து வரவழைக்கப்பட்ட சிப் என்னும் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் பத்து நிமிடம் கோவிலுக்கு மேலே கோபுரத்திற்கு மிக அருகே நான்கு முறை வட்டமடித்து 121 கிலோ மலர்களை
விநாயகர்கோயில், கும்பாபிஷேகம், கோலாகலம்

கோவை : கோவை மாவட்டம் அன்னூர் அருகே கரியா கவுண்டனூரில் 70 ஆண்டுகள் பழமையான செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் இன்று(செப்.,12) நடந்தது. ஒன்றரை கோடி ரூபாயில் திருப்பணி செய்யப்பட்ட இக்கோயிலில் இன்று காலை கொச்சியில் இருந்து வரவழைக்கப்பட்ட சிப் என்னும் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் பத்து நிமிடம் கோவிலுக்கு மேலே கோபுரத்திற்கு மிக அருகே நான்கு முறை வட்டமடித்து 121 கிலோ மலர்களை தூவியது.


நீண்ட நாட்களுக்கு பிறகு கோவை மாவட்டத்தில் அன்னூரில் ஒரு கிராம கோயிலில் ஹெலிகாப்டர் வாயிலாக மலர் தூவப்பட்டது பெரும் வரவேற்பு பெற்றது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஹெலிகாப்டர் வாயிலாக மலர் தூயதை ஆர்வத்துடன் பார்த்தனர். மூன்று லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி ஹெலிகாப்டரை இப்பணியில் ஈடுபடுத்தியதாக கோயில் தரப்பினர் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X