'நீட்' தேர்வில் தேசியளவில் 8ம் இடம் ஓசூர் மாணவருக்கு பாராட்டு

Added : செப் 12, 2022 | |
Advertisement
ஓசூர் தின்னுாரை சேர்ந்தவர்கள் ராஜேஷ்குமார், ஸ்ரீவித்யா தம்பதி. இவர்களது மகன் கிருஷ்ணா, 19; ஓசூரிலுள்ள தனியார் பள்ளியில், பத்தாம் வகுப்பு வரை படித்த இவர், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வை, கர்நாடகா மாநிலம், பெங்களூருவிலுள்ள தனியார் பள்ளியில் படித்தார். 'நீட்' தேர்வை, கர்நாடகா மாநிலத்தில் எழுதினார். இதன் முடிவுகள் வெளியான நிலையில் மொத்தம், 720 மதிப்பெண்களுக்கு, 710 மதிப்பெண்கள்

ஓசூர் தின்னுாரை சேர்ந்தவர்கள் ராஜேஷ்குமார், ஸ்ரீவித்யா தம்பதி. இவர்களது மகன் கிருஷ்ணா, 19; ஓசூரிலுள்ள தனியார் பள்ளியில், பத்தாம் வகுப்பு வரை படித்த இவர், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வை, கர்நாடகா மாநிலம், பெங்களூருவிலுள்ள தனியார் பள்ளியில் படித்தார். 'நீட்' தேர்வை, கர்நாடகா மாநிலத்தில் எழுதினார். இதன் முடிவுகள் வெளியான நிலையில் மொத்தம், 720 மதிப்பெண்களுக்கு, 710 மதிப்பெண்கள் பெற்று தேசியளவில், 8ம் இடம் பெற்றார். இவருக்கு, ஓசூரில் நேற்று பாராட்டு விழா நடந்தது.
அப்போது மாணவர் கிருஷ்ணா பேசும்போது, ''மாணவர்கள், 'நீட்' தேர்வு எழுத அச்சப்படுகின்றனர். கஷ்டப்பட்டு உழைத்தால் எதையும் வென்று விடலாம். எனவே, 'நீட்' போன்ற தேர்வுகளில் மாணவர்கள் நன்கு படித்து, தேர்ச்சியடைய வேண்டும். தவறான முடிவுகளை எடுக்கக்கூடாது,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X