பள்ளி அருகே வேகத்தடை அகற்றம் கேட் வால்வு குழியில் எச்சரிக்கை போர்டு| Dinamalar

பள்ளி அருகே வேகத்தடை அகற்றம் கேட் வால்வு குழியில் எச்சரிக்கை போர்டு

Added : செப் 12, 2022 | |
ஈரோட்டில் பள்ளி அருகே இருந்த வேகத்தடைகள் அகற்றப்பட்டதால், கேட் வால்வு குழியில் எச்சரிக்கை பலகையை நட்டு வைத்துள்ளனர்.ஈரோடு - பவானி பிரதான சாலையில் ஆர்.என்.புதுார் உள்ளது. இங்கு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி செயல்படுகிறது. இதில், 200 மாணவ, மாணவியர் பயில்கின்றனர். வாகன விபத்துக்களை தவிர்க்கும் விதமாக, பள்ளி எதிரில் இரு இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டிருந்தது.கடந்த மாதம், 25,


ஈரோட்டில் பள்ளி அருகே இருந்த வேகத்தடைகள் அகற்றப்பட்டதால், கேட் வால்வு குழியில் எச்சரிக்கை பலகையை நட்டு வைத்துள்ளனர்.
ஈரோடு - பவானி பிரதான சாலையில் ஆர்.என்.புதுார் உள்ளது. இங்கு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி செயல்படுகிறது. இதில், 200 மாணவ, மாணவியர் பயில்கின்றனர். வாகன விபத்துக்களை தவிர்க்கும் விதமாக, பள்ளி எதிரில் இரு இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டிருந்தது.
கடந்த மாதம், 25, 26ல் ஈரோடு மாவட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்காக வேகத்டைகளை அகற்றினர். இதுவரை வேகதடை அமைக்கவில்லை. நிதியில்லை என்ற காரணத்தை காட்டி, வேகத்தடை அமைக்க சாத்தியமில்லை என, நெடுஞ்சாலை துறையும் கை விரித்து விட்டது. ஆனால், பிரதான சாலை என்பதால், அதிவேக வாகனங்களால் விபத்து அபாயம் காணப்படுகிறது.
இதனால் பெற்றோர், அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலை துறை எச்சரிக்கை போர்டு ஒன்றை, சாலை நடுவில் உள்ள கேட் வால்வு குழியில் வைத்துள்ளனர். பகலில் இதனால் எச்சரிக்கை அடைந்தாலும், இதனால் இரவில் வாகன விபத்து அபாயம் எழுந்துள்ளது. விரைவில் வேகத்தடை அமைக்க, பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X