மேட்டு மகாதானபுரத்தில் குழாயில் விரிசல்: வீணாகும் காவிரி நீர்

Added : செப் 12, 2022 | |
Advertisement
மேட்டு மகாதானபுரம், இரட்டை வாய்க்கால் பாலம் வழியாக செல்லும் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக தண்ணீர் வீணாகி வருகிறது.கரூர் மாவட்டம், மகாதானபுரம் காவிரி ஆற்றில் இருந்து வையம்பட்டி வரை கூட்டு குடிநீர் திட்டம் மூலம் காவிரி நீர் கொண்டு செல்லப்படுகிறது. இதன் மூலம் பல கிராம மக்கள் காவிரி நீரை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில்


மேட்டு மகாதானபுரம், இரட்டை வாய்க்கால் பாலம் வழியாக செல்லும் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக தண்ணீர் வீணாகி வருகிறது.
கரூர் மாவட்டம், மகாதானபுரம் காவிரி ஆற்றில் இருந்து வையம்பட்டி வரை கூட்டு குடிநீர் திட்டம் மூலம் காவிரி நீர் கொண்டு செல்லப்படுகிறது.
இதன் மூலம் பல கிராம மக்கள் காவிரி நீரை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மகாதானபுரம் காவிரி ஆற்றில் இருந்து மேட்டு மகாதானபுரம் இரட்டை வாய்க்கால் மேல்புறம் வழியாக குடிநீர் குழாய் செல்கிறது. இதில் அழுத்தம் காரணமாக அடிக்கடி விரிசல் ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது.
கடந்த மாதம் இந்த குழாயில் விரிசல் ஏற்பட்டு, அது சரி செய்யப்பட்ட நிலையில் தற்போது குழாயில் வேறு இடத்தில் மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் மீண்டும் வீணாகி வருகிறது.
எனவே, குடிநீர் குழாய் விரிசல் ஏற்படமால் தடுக்கும் வகையில் பராமரிப்பு செய்ய வடிக்கால் வாரிய
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X