கொல்லிமலை நீர்வீழ்ச்சிகளில் குளிக்க தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

Added : செப் 12, 2022 | |
Advertisement
கொல்லிமலை பகுதியில் தொடர் மழையால், அங்குள்ள நீர்வீழ்ச்சிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். நாமக்கல் மாவட்டத்தின் மூலிகை சுற்றுலாதலமாக கொல்லிமலை உள்ளது. இங்கு கடந்த, ஒரு மாதங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கொல்லிமலையில் உள்ள ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, நம் அருவி, மாசிலா அருவி,


கொல்லிமலை பகுதியில் தொடர் மழையால், அங்குள்ள நீர்வீழ்ச்சிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். நாமக்கல் மாவட்டத்தின் மூலிகை சுற்றுலாதலமாக கொல்லிமலை உள்ளது. இங்கு கடந்த, ஒரு மாதங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
கொல்லிமலையில் உள்ள ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, நம் அருவி, மாசிலா அருவி, புளியஞ்சோலையில் ஆர்ப்பரித்து ஓடுகிறது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, நம் அருவி, மாசிலா அருவி, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கும், புளியஞ்சோலை பகுதிக்கும், செல்லவும், குளிக்கவும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் விடுமுறை நாளான நேற்று, கொல்லிமலைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள், நீர்வீழ்ச்சிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X