கரூர் அருகே சமூக ஆர்வலர் கொலை; 3 பேர் கைது

Added : செப் 12, 2022 | |
Advertisement
கரூர்: க.பரமத்தி அருகே கல் குவாரியை எதிர்த்து போராடிய சமூக ஆர்வலர், கொல்லப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டில், குவாரி உரிமையாளர் உள்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே, காளிப்பாளையத்தை சேர்ந்தவர் ஜெகநாதன், 52; விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை டூவீலரில், காளிப்பாளையம் - காருடையாம்பாளையம் சாலையில் சென்றார். அப்போது வேன் டூவீலர் மீது மோதியதில்,


கரூர்: க.பரமத்தி அருகே கல் குவாரியை எதிர்த்து போராடிய சமூக ஆர்வலர், கொல்லப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டில், குவாரி உரிமையாளர் உள்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே, காளிப்பாளையத்தை சேர்ந்தவர் ஜெகநாதன், 52; விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை டூவீலரில், காளிப்பாளையம் - காருடையாம்பாளையம் சாலையில் சென்றார். அப்போது வேன் டூவீலர் மீது மோதியதில், சம்பவ இடத்தில் பலியானார். கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு, ஜெகநாதன் உடல் அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து க.பரமத்தி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஜெகநாதன் உடலை, நேற்று காலை பார்வையிட்ட, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் கூறியதாவது:
ஜெகநாதன் தோட்டத்துக்கு அருகில் உள்ள கல் குவாரியின் உரிமம், 2016ல் முடிந்து விட்டது. ஆனால் தொடர்ந்து செயல்பட்டதால், மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தார். இதனால், 2019ல் அவர் மீது கொலை வெறி
தாக்குதல் நடந்தது.
அப்போது அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தற்போது எதிரிகள் திட்டமிட்டு வேன் ஏற்றி கொன்றுள்ளனர். ஜெகநாதன் கொலைக்கு காரணமானவர்களை, போலீசார் கைது செய்ய வேண்டும். திருநெல்வேலி மாவட்டத்தில் கல் குவாரி
களில் ஆய்வு செய்ததுபோல, கரூர் மாவட்டத்திலும் கல் குவாரிகளில், அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிமம் இல்லாதவற்றை மூட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே ஜெகநாதன் மனைவி ரேவதி, கணவர் சாவில் மர்மம் இருப்பதாக, க.பரமத்தி போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார்.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் சேலம் மாவட்டம்,
ஓமலுாரை சேர்ந்த வேன் டிரைவர் சக்தி
வேல், ராணிப்பேட்டை மாவட்டம், காவனுாரை சேர்ந்த ரஞ்சித், 44; கரூர், சின்ன ஆண்டாங்கோவிலை பகுதியை சேர்ந்த அன்னை புளூ மெட்டல் உரிமையாளர் செல்வகுமார், 39; ஆகியோர், ஜெகநாதனை திட்டமிட்டு, வேன் ஏற்றி கொலை செய்தது தெரிந்தது. மூன்று பேரையும் போலீசார் நேற்றிரவு கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X