இந்திய பால்வளத்துறையின் உண்மையான தலைவர்கள் பெண்கள்தான்: பிரதமர் பெருமிதம்

Updated : செப் 12, 2022 | Added : செப் 12, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
நொய்டா: இந்தியாவின் பால்வளத்துறையின் உண்மையான தலைவர்கள் பெண்கள் தான் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.உத்தர பிரதேசம் மாநிலம் நொய்டாவில் சர்வதேச பால்வள கூட்டமைப்பின் 'உலக பால்வள உச்சிமாநாடு 2022' இன்று (செப்.,12) துவங்கியது. இந்திய எக்ஸ்போ மையத்தால் நடத்தப்படும் உச்சிமாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அப்போது மோடி பேசியதாவது: இந்தியாவில் 48 ஆண்டுகளுக்கு
India, PMModi, பால்வளம், பெண்கள், பிரதமர் மோடி, மோடி, Dairy Sector, Women, Modi,இந்தியா,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

நொய்டா: இந்தியாவின் பால்வளத்துறையின் உண்மையான தலைவர்கள் பெண்கள் தான் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசம் மாநிலம் நொய்டாவில் சர்வதேச பால்வள கூட்டமைப்பின் 'உலக பால்வள உச்சிமாநாடு 2022' இன்று (செப்.,12) துவங்கியது. இந்திய எக்ஸ்போ மையத்தால் நடத்தப்படும் உச்சிமாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அப்போது மோடி பேசியதாவது: இந்தியாவில் 48 ஆண்டுகளுக்கு பிறகு உலக பால்வள உச்சிமாநாடு நடைபெறுகிறது. 2014ல் இந்தியாவில் 146 மில்லியன் டன்னாக இருந்த பால் உற்பத்தி, தற்போது 220 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. அதாவது 2014ஐ ஒப்பிடுகையில் 8 ஆண்டுகளில் 44 சதவீதம் அதிகரித்துள்ளது.


latest tamil news


நாட்டில் சுமார் 8 கோடி குடும்பங்கள் பால் உற்பத்தித் துறை மூலமாக வேலைவாய்ப்பை பெற்றுள்ளன. சிறிய அளவிலான பால் பண்ணையாளர்களின் கூட்டு முயற்சியால் இந்தியா உலகின் மிகப்பெரிய பால் பொருட்களை உற்பத்தி செய்யும் நாடாக மாறியுள்ளது. இந்தியாவின் பால்வளத் துறையின் உண்மையான தலைவர்கள் பெண்கள்தான். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
12-செப்-202222:29:28 IST Report Abuse
Bhaskaran எல்லாத்துக்கும் ஆரம்ப காரணம் குரியன் ஐயா அவருக்கு பின்பலமாக இருந்த பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி
Rate this:
Cancel
12-செப்-202219:26:33 IST Report Abuse
அருண், சென்னை மின்கட்டணமும், பேருந்து பயண உயர்வு, வீட்டு வரி ஏரியதற்கும் இவர்தான் காரணம் என்று சொல்லுங்களேன்....எவ்வளவு அடிப்பட்டாலும் DMK காரர்களுக்கு புத்தியே வராதா?
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
12-செப்-202217:38:38 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் மாட்டு இறைச்சி ஏற்றுமதி கடந்த எட்டு ஆண்டுகளில் அதே அளவு உயர்ந்துள்ளதும் ஒரு பெருமையே. எல்லாம் விவசாய உணவு பொருட்கள் தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X